- Advertisement -
Homeபொழுதுபோக்குகாருக்குள் இருந்து சாண்ட்ராவை உதைத்து வெளியே தள்ளிய பார்வதி… கம்ருதீனின் அடாவடியால் கொதித்துப் போன பிக்பாஸ்...

காருக்குள் இருந்து சாண்ட்ராவை உதைத்து வெளியே தள்ளிய பார்வதி… கம்ருதீனின் அடாவடியால் கொதித்துப் போன பிக்பாஸ் பார்வையாளர்கள் – உறுதியான ரெட்கார்டு!

- Advertisement -

விஜய் டிவியில் இப்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நடந்து வருகிறது. டிக்கெட் டு பினாலேவுக்காக விறுவிறுப்பான டாஸ்க்குகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகின்றன. இதில் கடைசியாக நேற்றிரவு கார் டாஸ்க் நடந்தது. இதில் வீட்டில் உள்ள 9 போட்டியாளர்களும் காருக்குள் நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

அப்போது பார்வதி கம்ருதீன் வழக்கம்போல காதல்மொழி பேசி காருக்குள் அவர்களது லீலையை தொடர்ந்தனர். அப்போது சாண்ட்ரா கம்ருதீன் பார்வதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாயை மூடுடி பெரிய இவ மூஞ்சியைப் பாரு நீ ரொமான்ஸ் பண்ணித்தானே 2 கொழந்தே பெத்தே? செருப்பால அடிப்பேன் என வரம்பு மீறிய வார்த்தைகளால் கம்ருதீன் சாண்ட்ராவை பேசியது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

காருக்குள் இருந்த சக போட்டியாளர்கள் சொல்லியும் கம்ருதீன் அதை கண்டுகொள்ளவில்லை. அருகில் இருந்த பார்வதி ட்ரிக்கர் செய்து கம்ருதீனை தொடர்ந்து தூண்டிவிட்டு பேச வைத்ததும் பார்வையாளர்களுக்கு கடுப்பை கிளப்பியது. ஒரு கட்டத்தில் காருக்குள் இருந்த சாண்ட்ராவை பார்வதி கம்ருதீன் இருவரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக இழுத்து வெளியே உதைத்து தள்ளி விட்டனர்.

இந்த அதிர்ச்சியில் சாண்ட்ராவுக்கு வலிப்பு ஏற்பட காருக்குள் இருந்த கானா வினோத், சபரி இருவரும் இறங்கி ஓடிவந்து அவருக்கு முதலுதவி செய்து பரபரப்பாக சாண்ட்ராவை மருத்துவ சிகிச்சை தரும் அறைக்கு தூக்கிச் சென்றனர். அப்போது சாண்ட்ரா நடிப்பதாக கம்ருதீன் அலட்சியமாக கூற அதுதான் மெடிக்கல் டீம் இருக்குதுல்ல, அப்புறம் என்ன என்று எகத்தாளமாக பதில் சொன்னார்.

- Advertisement -

அவர்களது அடாவடியான திமிரான நடவடிக்கைகளால் கோபத்தின் உச்சத்துக்கே சென்ற திவ்யா கணேஷ் சபரிநாதன் கானா வினோத் விக்ரம் போன்றவர்கள் கடுமையாக அவர்களை எச்சரித்து திட்டினர். இதனால் விக்ரம் கம்ருதீன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபரியும் கம்ருதீனை கோபமாக பேச அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது.

ஆனால் இத்தனைக்கும் மூலகாரணமாக இருந்து சாண்ட்ராவை கீழே உதைத்து தள்ளிய பார்வதி எல்லாவற்றையும் ஜாலியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு சிரித்தபடி ரசித்துக்கொண்டு இருந்தார். இப்படி ஒரு கேவலமான மனித தன்மையற்ற ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பதே பெரிய தவறு. உடனடியாக கம்ருதீன் பார்வதி இரண்டு பேரையும் ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பலரும் பதிவுகளை செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்