- Advertisement -
Homeபொழுதுபோக்குவிவாகரத்து கேட்டு நீதிமன்றம் படியேறிய தனுஷ் - ஐஸ்வர்யா... ரசிகர்கள் வருத்தம்...

விவாகரத்து கேட்டு நீதிமன்றம் படியேறிய தனுஷ் – ஐஸ்வர்யா… ரசிகர்கள் வருத்தம்…

- Advertisement -

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவே உற்றுநோக்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் தனுஷ். தமிழ் தெலுங்கு இந்தி என பல மொழிகளில் தனது நடிப்பின் திறமையை வெளிக்காட்டி இருக்கும் தனுஷ், ஹாலிவுட் படம் வரை சென்று இருக்கிறார்.

புகழின் உச்சியில் இருக்கும் தனுஷிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு திரைப்படத்திலும், தனது நடிப்பின் திறமையை கூட்டிக் கொண்டே வரும் தனுஷ், தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். இவருக்கும் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவுக்கும் 2004 ஆம் ஆண்டு திருமணமானது.

- Advertisement -

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தனுசை விட அவரது மனைவி ஐஸ்வர்யா ஒரு வயது மூத்தவர். இருப்பினும் இருவரின் காதலுக்கும் பெற்றோர் சம்பந்தம் தெரிவித்ததால், இவர்களது திருமணம் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு, யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இப்படியான சூழலில், 2022 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தாங்கள் பிரிவதாக அறிவித்தனர். இதனைக் கேட்டு தமிழ் திரை உலகமே அதிர்ச்சி அடைந்தது. இருவரையும் சேர்த்து வைக்க அவரது உறவினர்கள் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, வழக்கமாக திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார் தனுஷ்.

- Advertisement -

இதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும், ஒன்பது ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவர் தனது தந்தையை வைத்து லால் சலாம் திரைப்படத்தை இயக்கி இருந்தார். திரைப்படங்கள் ஒருபுறம் இருக்க பொது நிகழ்ச்சிகளில் இருவரும் தனித்தனியாகவே கலந்து கொண்டனர்.

இருவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவர்களது மகன்கள், கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் இருவரும் விவாகரத்து கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் பிரிய முடிவெடுத்த சூழலில், தற்போது விவாகரத்து தான் தீர்வு என்ற முடிவோடு அவர்கள் நீதிமன்றத்தின் நாடி இருக்கிறார்கள். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்