- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படத்தில் நான் நடிப்பதற்கு அது மட்டுமே காரணம், மற்றபடி பணத்துக்காக இந்த படத்தில் நான்...

கூலி படத்தில் நான் நடிப்பதற்கு அது மட்டுமே காரணம், மற்றபடி பணத்துக்காக இந்த படத்தில் நான் நடிக்கவில்லை – பகிரங்கமாக பேசிய கன்னட நடிகர் உபேந்திரா

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். சென்னை ஐதராபாத் ஆந்திரா விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கூலி படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து வேகமாக நடந்து வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் அமிதாப் பச்சன் கேமியோ ரோலில் நடித்துள்ளார். தசெ ஞானவேல் இயக்கியுள்ள இந்த படம் என்கவுண்டர் விவகாரத்தை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவாகி உள்ளது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக ரஜினிகாந்த் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வேட்டையன் படத்தில் பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். வேட்டையன் படத்தை தொடர்ந்து கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் நிலையில், இந்த படத்தில் ரஜினிகாந்த் ஏற்றுள்ள வேடம் மற்றும் மற்ற நடிகர்களின் கதாபாத்திரம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

எனினும் கூலி படத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என முக்கிய நடிகர்கள், நடிகைகளை களத்தில் இறக்கி பான் இந்தியா மூவியாக இந்த படத்தை தருவதில் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா நடிக்கிறார். உபேந்திரா, விஷால் நடித்த சத்யம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர். கடந்தாண்டு வெளியான ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ரஜினியுடன் நடித்திருந்தார்.

- Advertisement -

இப்போது கூலி படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு மீன்பிடித் துறைமுகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிப்பது குறித்து கன்னட நடிகர் உபேந்திரா கூறுகையில், கூலி படத்தில் நடிக்க வேண்டும் என்று படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னை நேரில் சந்தித்து கதை சொன்னார். அப்போது அவரிடத்தில் ரஜினி வரும் காட்சிகளில் அவருடன் நானும் இருக்க வேண்டும். அது ஒன்று எனக்கு போதும் என்று தெளிவாக கூறிவிட்டேன்.

அந்த அளவுக்கு அவர் மீது எனக்கு நிறைய மரியாதை உள்ளது. ரஜினி என்ற ஒரே ஒரு பெயருக்காக மட்டுமே இந்த படத்தில் நான் நடிக்கிறேன். அவருடைய மிகப்பெரிய ரசிகன் நான். மற்றபடி இந்த படத்தில் பணத்துக்காக எல்லாம் நான் நடிக்கவில்லை என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் நடிகர் உபேந்திரா. அவரது இந்த பேச்சு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய உற்சாகத்தை, வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

சற்று முன்