நடிகர் கார்த்தி தற்போது சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்து இருக்கிறார். பி எஸ் மித்ரன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். வில்லனாக எஸ்.ஜே சூர்யா வருகிறார். அண்மையில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியானது.
படத்திற்கு முதலில் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலக தற்போது அவருக்கு பதில் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். அனேகமாக வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் சர்தார் திரைப்படம் திரையரங்குகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்தி கைதி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார். எல் சி யூ வின் தொடர்ச்சியாக இந்த திரைப்படத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது அவர் கூலி திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். இதன் பணிகளை முடித்த பிறகு அவர் ஆகஸ்ட் மாதத்தில் இந்த திரைப்படத்திற்கான சூட்டிங்கை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க டானாகாரன் இயக்குனர் தமிழ் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார் கார்த்தி. ராமேஸ்வரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படம் கேங்ஸ்டர் பாணியில் உருவாகிறது. 1960களில் காட்சிகள் இருப்பது போல பீரியட் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாம்.
மீனவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தியே இந்த திரைப்படத்தை எடுக்க தமிழ் திட்டமிட்டு இருக்கிறார். இரண்டு பாகங்களாக இது உருவாவதாகவும் சொல்கிறார்கள். இப்படியான சூழலில் தான் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகும் ஹிட் 3 திரைப்படத்தில், கார்த்தி கெஸ்ட் ரோலில் வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஹிட் படத்தின் முதல் இரண்டு பாகங்களும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனை நானி தான் தயாரித்திருந்தார். தற்போது மூன்றாம் பாகத்தை அவரே தயாரிப்பதுடன், கதாநாயகனாகவும் நடிக்கிறார். இதில் கார்த்தி வருவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கும் சூழலில், அதன் அடுத்த பாகமான ஹிட் 4 திரைப்படத்திலும் அவர்தான் ஹீரோவாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிட் 3 திரைப்படம் வரும் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.





