- Advertisement -
Homeபொழுதுபோக்குதானாக முன்வந்து நடிகர் கார்த்தி செய்த அந்த தரமான சம்பவம்… இந்த மனசு தமிழ் சினிமாவில்...

தானாக முன்வந்து நடிகர் கார்த்தி செய்த அந்த தரமான சம்பவம்… இந்த மனசு தமிழ் சினிமாவில் பலருக்கும் வருமா? – பாராட்டும் ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி பருத்திவீரன் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரை ஒரு சண்டியராக ரவுடித்தனம் கொண்ட கேரக்டரில் நடிக்க வைத்து இயக்குனர் அமீர் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தார். இன்று வரை நடிகர் கார்த்திக்கு பருத்திவீரன் சிறந்த அடையாளமாக இருந்து வருகிறது.

அதன் பிறகு நடிகர் கார்த்தி நடித்த பல படங்கள் வெற்றிப் படங்களாக இருந்திருக்கின்றன. சில படங்கள் சுமாரான வரவேற்பை பெற்ற படங்களாக இருந்தன. ஆனால் அவரது 25வது படம் இயக்குனர் ராஜூ முருகன் இயக்கிய ஜப்பான் படம் மட்டும் பலத்த தோல்வியை சந்தித்தது. அடுத்து அரவிந்த்சாமி கார்த்தி நடித்த மெய்யழகன் படம் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இப்போது இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 படத்தில் நடிக்க உள்ளார். இது தவிர இன்னும் சில படங்களில் நடிக்க ஏற்கனவே நடிகர் கார்த்தி கமிட் ஆகி இருப்பதால் தொடர்ந்து அவர் லைன் அப்களில் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்த சூழலில் இப்போது நடிகர் கார்த்தி, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இந்த படம் எமோஷனல் பேமிலி டிராமா படமாக உருவாக்கப்படுகிறது. வழக்கமாக பேமிலி சென்டிமென்ட் படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்த சிறுத்தை சிவா, நடிகர் கார்த்தி நடிக்கும் இந்த புதிய படத்தையும் அதே ஜானரில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

நடிகர் கார்த்தி நடித்த சிறுத்தை படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனரான சிவா, அந்த படம் பெரிய வெற்றியை பெற்றதால் தொடர்ந்து சிறுத்தை சிவா என அழைக்கப்பட்டார். பிறகு அஜீத்குமார் நடிப்பில் வீரம் விவேகம் வேதாளம் விஸ்வாசம் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். ஆனால் அவர் இயக்கிய ரஜினி நடித்த அண்ணாத்த சூர்யா நடித்த கங்குவா படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

அதுவும் கடந்த ஆண்டில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம் பார்த்த ரசிகர்கள், இயக்குனர் சிறுத்தை சிவாவை திட்டித் தீர்த்தனர். மற்ற தயாரிப்பாளர்கள் யாரும் அவருக்கு வாய்ப்பு தர முன்வராத நிலையில் நடிகர் சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி, சிறுத்தை சிவாவுக்கு தன் படத்தை இயக்க வாய்ப்பளித்துள்ளார். தன் அண்ணனை வைத்து படம் இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா தோல்வியால் துவண்டு போன நிலையில், தானாக முன்வந்து தனது படத்தை இயக்க வாய்ப்பளித்த நடிகர் கார்த்தியை தமிழ் சினிமா துறையினரும் ரசிகர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்