- Advertisement -
Homeபொழுதுபோக்குஉறவுகளின் உன்னதத்தை போற்றுகிறானா மெய்யழகன்... முன்னோட்டத்தை பார்த்தே கண் கலங்கிய ரசிகர்கள்... அடுத்த வெற்றிக்கு அச்சாரம்...

உறவுகளின் உன்னதத்தை போற்றுகிறானா மெய்யழகன்… முன்னோட்டத்தை பார்த்தே கண் கலங்கிய ரசிகர்கள்… அடுத்த வெற்றிக்கு அச்சாரம் போட்ட இயக்குனர்…

- Advertisement -

96 திரைப்படத்தை தொடர்ந்து பிரேம்குமார் அடுத்ததாக இயக்கியிருக்கும் திரைப்படம் மெய்யழகன். கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண் ஸ்ரீதிவ்யா உள்பட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக்கு நிகரான கதாபாத்திரத்தில் வருகிறார் அரவிந்த்சாமி.

 

- Advertisement -

சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது. 96 திரைப்படத்தைப் போலவே இதனையும் தஞ்சை சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார்.

 

- Advertisement -

கோவிந்த் வசந்தாவின் இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்துள்ளன. முதலில் இது தொடர்பான கதையை பிரேம்குமார் நாவலாக தான் எழுதியிருக்கிறாராம். இது திரைப்படம் ஆகாது என்று அவரே நினைத்துக் கொண்டு, நாவலை ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கதாபாத்திரங்களை மனதில் வைத்து இதற்கான புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

 

இது தொடர்பான கதையை கார்த்தியும் அரவிந்த்சாமியும் படிக்க அது தற்போது மெய்யழகன் திரைப்படமாக வளர்ந்து இருக்கிறது. 96 திரைப்படத்தைப் போலவே இரண்டு கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் உரையாடல் தான் இந்த திரைப்படம் என்பது அதன் டீசர் வெளியாகும் போது நமக்கு புரிந்தது.

 

அப்பாவித்தனமான கார்த்தி, தனது உடல் மொழியிலும் அந்த அப்பாவித்தனத்தை காட்டி அரவிந்த் சாமியை அன்போடு அத்தான் அத்தான் என்று அழைப்பது டீசரை பார்த்த பலருக்கும் பிடித்துப் போனது. வரும் 27ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் சூழலில் தற்போது அதற்கான ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

 

உறவுகளின் உன்னதத்தை மிக அழகாக பிரேம்குமார் வர்ணித்திருப்பது இதன் ட்ரைலரை பார்க்கும்போதே தெரிகிறது. அதிலும் குறிப்பாக கார்த்தியின் நடிப்பு எந்த அளவுக்கு சிறப்பாக இருக்கும் என்பதை முன்னோட்டமே உணர்த்துகிறது. இப்படி படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் அது இரண்டு மணி நேரம் 57 நிமிடங்கள் இருப்பது தான் தற்போது ரசிகர்களை சோர்வடைக்க வைத்து விடுமோ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. இருப்பினும் படம் நன்றாக வந்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

சற்று முன்