- Advertisement -
Homeபொழுதுபோக்குநளன்குமார சாமியுடன் கார்த்தி இணையும் படத்தின் போஸ்டர் வந்தாச்சு... டைட்டிலே செம கெத்தா இருக்கேப்பா...

நளன்குமார சாமியுடன் கார்த்தி இணையும் படத்தின் போஸ்டர் வந்தாச்சு… டைட்டிலே செம கெத்தா இருக்கேப்பா…

- Advertisement -

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் தனது திறமையை வெளிக்கொண்டு வந்தவர் இயக்குனர் நளன் குமாரசாமி. அங்கிருந்து தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த அவர், முதல் வெள்ளித்திரைப்படமாக சூது கவ்வும் படத்தை இயக்கினார்.

 

- Advertisement -

தமிழ் சினிமாவில் அதுவரை அப்படி ஒரு திரைப்படம் வெளியானதே இல்லை என்பதை அடித்துக் கூறலாம். அந்த அளவுக்கு டார்க் காமெடி திரைப்படமாக, ரசிகர்களை குதூகலப்படுத்தும் வகையில் அந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. விஜய் சேதுபதி அந்த படத்தின் நாயகனாக நடித்திருந்தார்.

 

- Advertisement -

பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன் என ஒரு மிகப்பெரிய டீமே அந்த படத்தில் பணிபுரிய, அதன் அவுட்புட் சிறப்பாக அமைந்தது. சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்திற்கு தெம்பூட்டியதால், சூது கவ்வும் திரைப்படம் கொண்டாடப்பட்டது. இப்படி தனது முதல் திரைப்படத்தின் மூலம், தனக்கென ரசிகர்களை சம்பாதித்தார் நலன் குமாரசாமி.

 

இந்தப் படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் எடுத்த திரைப்படம் தான் காதலும் கடந்து போகும். தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் திரைப்படங்கள் வந்திருக்கலாம். ஆனால் அத்தனையிலும் தனித்துவத்தை நிறுத்தி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது காதலும் கடந்து போகும் திரைப்படம்.

 

குறிப்பாக படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மடோனா இருவரும் தங்கள் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலமாக அமைந்தனர். 2016 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஆனால் இதன் பிறகு, இயக்கத்தில் இருந்து சற்று விலகியே இருந்தார் நலன் குமாரசாமி. இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்.

 

கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வா வாத்தியாரே என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடிக்கிறார். நடிகர்கள் ராஜ்கிரன் சத்யராஜ் உள்ளிட்டோரும் இதில் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அதில் கார்த்தி போலீஸ் கெட்டப்பில் இருக்கிறார். கார்த்தியின் 26வது திரைப்படமாக உருவாகி இருக்கும் இது, இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்