இயக்குனர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டில் வெளியான பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. முன்னணி நடிகராக வலம் வருகிறார். கடைசியாக கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிகர் அரவிந்த் சாமியும் நடித்திருந்தார்.
அடுத்து இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான வா வாத்தியார் படம் வெளிவர இருக்கிறது. இப்போது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படத்தில் நடித்து வரும் நடிகர் கார்த்தி, அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள இருக்கிறார்.
நடிகர் கார்த்தியை பொருத்த வரை அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே பல மாதங்கள் படப்பிடிப்பு நடக்கும் படங்களாகவே இருக்கின்றன. இதனால் அவரது படங்கள் ஒரு ஆண்டுக்கு மேல் இடைவெளிகளில் ரிலீஸாகிறது. இது அவரது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்து வருகிறது. இப்போது நடித்து வரும் சர்தார் 2 மற்றும் அடுத்து நடிக்க உள்ள கைதி 2 படங்களும் பல மாதங்களுக்கு படப்பிடிப்பு நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையே இயக்குனர் சுந்தர் சி, நடிகர் கார்த்தி சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இயக்குனர் சுந்தர் சியை பொருத்த வரை ரசிகர்களை திருப்திப்படுத்தும் படங்களை இயக்கி புகழ் பெற்றவர். காதல் காமெடி கவர்ச்சி என்ற தாரக மந்திரத்தை தன் இயக்கமாக கொண்டவர். அவரது இந்த கலவை ஜானரில் உருவாகும் படங்கள் நிச்சயமாக இரண்டரை மணி நேரத்தை ரசிகர்கள் ஜாலியாக கழிக்க உத்தரவாதம் தருகிறது.
அதனால்தான் 12 ஆண்டுகளுக்கு பின் வெளியான மதகஜ ராஜா படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வரும் சுந்தர் சிக்கு ரூ. 20 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. அதனால் சுந்தர் சியை பொருத்த வரை ஒரு வெற்றிக்கரமான படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பது என்பது அவருக்கு கைவந்த கலையாக உள்ளது.
அதனால் நடிகர் கார்த்தியை சந்தித்து பேசிய இயக்குனர் சுந்தர் சி, மூன்று மாதங்கள் மட்டும் கால்ஷீட் கொடுங்கள். படத்தை முடித்து தருகிறேன் என்று சூப்பர் உத்தரவாதம் தர, உற்சாகமான நடிகர் கார்த்தி உடனே ஓகே சொல்லி இருக்கிறார். வருகிற டிசம்பர் மாதம் துவங்கி, 2026ம் ஆண்டில் ஜனவரி பிப்ரவரி என 3 மாதங்கள் இந்த படத்தின் ஷூட்டிங் நடக்கிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. சுந்தர் சி, கார்த்தி காம்போ பெரிய வெற்றியை பெறும் என்று ரசிகர்கள் குதூகலிக்கின்றனர்.





