- Advertisement -
Homeபொழுதுபோக்குபுதுமுக இயக்குனர் அறிமுகமாகும் சொட்ட சொட்ட நனையுது - இது யாரை பத்தின கதை தெரியுமா?...

புதுமுக இயக்குனர் அறிமுகமாகும் சொட்ட சொட்ட நனையுது – இது யாரை பத்தின கதை தெரியுமா? அதுக்கு தலைமுடிய பிச்சுக்கற அவசியமே இல்லீங்க!

- Advertisement -

இப்போதெல்லாம் சினிமா என்பது எப்படிப்பட்ட கதை திரைக்கதையில் உருவாகி இருந்தாலும் அது ரசிகர்கள் விரும்பும்படியான ஒரு படமாக இருந்தால் மட்டுமே போதுமானது. அதுவே வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடிகர் வைபவ் நடித்த பெருசு என்ற படம் திரைக்கு வந்தது. இதில் பெருசு என்பது என்ன, படத்தின் மையக்கரு என்ன என்பது படம் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இப்படி அடல்ட் ஒன்லி சார்ந்த திரைக்கதையில் உருவான படங்கள் வெளியாகும் நிலையில் குட் பேட் அக்லி போன்ற பழைய படங்களின் ரெபரென்ஸ் தொகுப்பாக உருவான படமும் பெரிய வெற்றியை பெற்று விடுகின்றன. கதை திரைக்கதை எல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு ஹீரோவின் புகழ் பாடும் ஒரு படம் ஜெயிப்பதை குட் பேட் அக்லி படம் நிரூபித்து காட்டியது.

- Advertisement -

இது குட் பேட் அக்லி படத்துக்கு மட்டுமின்றி ரஜினி கமல் விஜய் சூர்யா தனுஷ் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களின் நிலையும் இதுதான். பெரும்பாலும் ஹீரோவை பெரிய அசகாய சூரனாக காட்டுவதும், அவரால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை என்று பில்டப் செய்வதும்தான் இன்றைய இயக்குனர்களின் முக்கிய பணி. கூலி ஜெயிலர் ரெட்ரோ இட்லி கடை ஜனநாயகன் தக்லைப் என வரப்போகும் பல படங்களும் இதையே நிரூபிக்க போகின்றன.

இந்நிலையில் அட்லர் என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் தயாரிப்பில் சொட்ட சொட்ட நனையுது என்ற படம் உருவாகியுள்ளது. படத்தின் தலைப்பை பார்த்தால் இது காதல் படம் அல்ல. சொட்டை தலை உள்ள மக்களின் பிரச்னைகளை மையப்படுத்திய காமெடி படம். புதுமுக இயக்குனர் நவீன் பரீத் இந்த படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

- Advertisement -

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் புகழ் பெற்ற ராஜா இந்த படத்துக்கு கதை வசனம் எழுதியுள்ளார். சொட்ட சொட்ட நனையுது படத்தில் நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் வர்ஷினியும் அறிமுக நடிகை ஷாலினியும் நடிக்கின்றனர். இவர்களுடன் மேலும் சிலர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

இந்த படம் குறித்து இயக்குனர் கூறியதாவது, இன்றைய தலைமுறையின் முக்கிய சிக்கலை ஒரு கலக்கலான கமர்சியல் படமாக சிரிக்க வைக்கும் ஒரு காமெடி படமாக உருவாக்கி இருக்கிறோம். இளம் வயதில் தலையில் சொட்டை விழும் நாயகனுக்கு வீட்டில் திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். அதைத் தொடர்ந்து நடக்கும் கலகலப்பான சம்பவங்களும் அதிரடி திருப்புங்களும்தான் இந்த படத்தின் மையக்கரு. அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழும் ஒரு கமர்சியல் படைப்பாக இந்த படம் உருவாகி உள்ளது என்று அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்