- Advertisement -
Homeபொழுதுபோக்குரெட்ரோவை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் இதுதான்... அடடே பிளானே செம ஸ்மார்ட்டா...

ரெட்ரோவை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் இதுதான்… அடடே பிளானே செம ஸ்மார்ட்டா இருக்கே…

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம், குறும்படங்களை இயக்கி பலரது பாராட்டுகளை அவர் பெற்றார். அங்கிருந்து வெள்ளித்திரைக்கு பயணித்த, கார்த்திக் சுப்புராஜுக்கு முதல் திரைப்படமாக அமைந்தது பீட்சா.

ஹாரர் திரைப்படத்தை புதுவிதமான ஜானரில் கொடுத்து, பலரையும் திரும்பி பார்க்க வைத்தார் கார்த்திக் சுப்புராஜ். அந்த ஒரு படமே அவர் யார் என்பதை தீர்மானித்து விட்டது. இதன் பிறகு அவர் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படமும் மிகப்பெரிய அளவில் நல்ல விமர்சனத்தை பெற்றது. அதில் சேது கதாபாத்திரத்தில் வாழ்ந்த பாபி சிம்ஹா, தேசிய விருதைப் பெற்று கௌரவிக்கப்பட்டார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து மூத்த நடிகர்களுடன் இணைந்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தார் கார்த்திக் சுப்புராஜ். ரஜினிகாந்துடன் அவர் இணைந்து கொடுத்த பேட்ட திரைப்படம், அவரது ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்தது. ரஜினி வரும் ஒவ்வொரு காட்சிகளும் ஸ்டைலான சீன்களை புகுத்தி, திரையரங்குகளில் விசில் பறக்கச் செய்தார்.

இதன் பிறகு தனுசுடன் இணைந்து ஜகமே தந்திரம், விக்ரமுடன் இணைந்து மகான் ஆகிய திரைப்படங்களை கார்த்திக் சுப்புராஜ் கொடுத்தார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் அவருக்கு பெரும் திருப்புமுனையை தந்தது. இறுதியாக சூர்யாவை வைத்து, ரெட்ரோ திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார். இது கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

- Advertisement -

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதேசமயம் தயாரிப்பாளருக்கு லாபகரமாகவும் அமைந்ததாக பலரும் கூறினர். இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக யாருடன் பணியாற்ற போகிறார் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது. அவர் மூத்த நடிகர்கள் உடனேயே இணைவார் என்று, கோலிவுட் வட்டாரத்தில் பேசி வந்தார்கள்.

ஆனால் தனது வழியை மொத்தமாக மாற்றி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அடுத்ததாக அவர் முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து ஒரு சிறிய பட்ஜெட் திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டு உள்ளாராம். முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களில் அந்த திரைப்படத்தை அனுப்பி வைத்துவிட்டு அதன் பிறகு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்த்திக் சுப்புராஜின் இந்த முயற்சி பலரையும் கவனம் ஈர்க்கச் செய்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்