- Advertisement -
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய திரௌபதி பட இயக்குனர் மோகன்ஜி திருநங்கைகள் திருமணம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, டோரதி படத்திற்கு நிறைய வெறுப்பு பிரசாரங்களை பார்க்க முடிந்தது. ஒரு தரப்பு குறிவைத்து இந்த வெறுப்பை பரப்பினர். ஆனால் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மோகன்ஜி என்ற இயக்குனர், திருநங்கைகள் மீது பயங்கரமான அவமதிப்பை செய்திருக்கிறார். அதை பார்க்கும் போது திருநங்கைகளின் மீதான மனரீதியான வன்முறையாகவே எனக்குத் தோன்றியது இதை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கார்த்திக் சுப்பராஜ் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.





