நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத்குமார் நடிக்கும் அவரது அடுத்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்ய இருக்கிறார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகி என்றும் கூறப்படுகிறது.
வருகிற அக்டோபர் மாதம் வரை கார் ரேஸ் இருப்பதால் அதற்கு பின்பு நவம்பரில்தான் ஏகே 64 படப்பிடிப்பை துவங்க உள்ளனர். கடந்த 6 மாதங்களாக துபாய் இத்தாலி போர்சுக்கல் ஸ்பெயின் என வெளிநாடுகளில் நடந்து வரும் கார் ரேஸில் பங்கேற்றுள்ள அஜீத்குமார் வருகிற அக்டோபர் வரை கார் ரேஸில் பிஸியாக இருக்கும் நிலையில், நவம்பரில் ஏகே 64 படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.
இதற்கிடையே நடிகர் அஜீத்குமார் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் என்ன என்பது குறித்த தகவல் கசியத் துவங்கியிருக்கிறது. அதன்படி ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பிறகு அஜீத்குமார் நடிக்கப் போகும் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏனெனில் சமீபத்தில் அவர் அஜீத்குமாரிடம் பேசியிருக்கிறார்.
கார்த்திக் சுப்பராஜ் சொன்ன கதை அஜீத்குமாருக்கு பிடித்து விட்டதாகவும் அஜீத்குமார் நடிக்கும் 65வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே இதுவும் ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்குமோ என ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ரஜினி சூர்யா விஜய் சேதுபதி ராகவா லாரன்ஸ் ஆகியோரது படங்களை தொடர்ந்து அஜீத்குமார் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நடிகர் அஜீத்குமாரிடம் நடிகர் தனுஷ் ஏற்கனவே கதை சொன்னதாகவும் அந்த கதையை ஸ்கிரிப்ட் ஆக ரெடி செய்யுங்கள் என்று தனுஷிடம் அஜீத்குமார் சொன்னதாகவும் ஒரு தகவல் பல மாதங்களுக்கு முன்பே வெளியானது. துபாயில் மிக விரைவில் அஜீத்குமாரை தனுஷ் சந்தித்து கதை சொல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையே கார்த்திக் சுப்பராஜிடம் கதை கேட்ட அஜீத்குமார் ஓகே சொல்லி இருப்பதால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ஏகே 64 படத்துக்கு பிறகு அஜீத்குமார் நடிக்கப் போவது தனுஷ் இயக்கத்திலா அல்லது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்திலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் அஜீத்குமாரை பொருத்த வரை என்ன முடிவு எடுக்கிறாரோ அவருக்கு தான் ஏகே 65 படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.





