- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படத்தில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் மீது இயக்குனர் கரு பழனியப்பன் போலீசில் புகார்...

விஜய் படத்தில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் மீது இயக்குனர் கரு பழனியப்பன் போலீசில் புகார் – என்னது, அவர் சொந்த பெரியப்பாவா?

- Advertisement -

அங்காடி தெரு படத்தில் ஜவுளிக்கடை முதலாளி கேரக்டரில் நடித்திருந்தார் பழ கருப்பையா. தொடர்ந்து விஜய் நடித்த சர்கார் படத்தில் முதலமைச்சர் கேரக்டரிலும் பழ கருப்பையா நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அரசியல்வாதியான பழ கருப்பையா அடிக்கடி சினிமா அரசியல் சமூகம் சார்ந்த தனது கருத்துகளை வெளியிடுவது வழக்கம். இவரது சொந்த தம்பி மகன்தான் இயக்குனர் கரு பழனியப்பன் என்று கூறப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் திரைப்பட இயக்குனர் கரு பழனியப்பன். கடந்த பல ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறார். பார்த்திபன் கனவு சிவப்பதிகாரம் ஜன்னல் ஓரம் சதுரங்கம் பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கரு பழனியப்பன். தனது தந்தையின் மூத்த சகோதரர் மற்றும் அரசியல்வாதி பழ கருப்பையா. இவர் தன்னை சாதிய வன்கொடுமைக்கு ஆளாக்குவதாக இயக்குனர் கரு பழனியப்பன் டிஎஸ்பி பார்த்திபனிடம் புகார் அளித்திருக்கிறார்.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் கடந்த 2004ம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்டேன். திருமணம் நடப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்பு தான் என் தந்தை சின்ன கருப்பையாவின் அண்ணனும் எங்கள் குடும்பத்தில் மூத்தவருமான பழ கருப்பையா, என்னை அழைத்து வேறு சமூகத்தில் காதல் திருமணம் செய்யக்கூடாது என்றார். மீறிச் செய்தால் குடும்பத்திற்குள்ளும் சுற்றத்தாருக்குள்ளும் என்னை தனிமைப்படுத்தி விடுவதாக மிரட்டினார்.

என் வீட்டாரின் சம்மதம் இருந்ததால் நான் காதல் திருமணம் செய்து கொண்டேன். கடந்த 21 ஆண்டுகளாக என் குடும்பம் மற்றும் உறவினர்களை சேர்ந்தவர்களின் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளுக்கும் என்னை அழைக்கக்கூடாது என அந்த நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். சுய சாதிக்குள் திருமணம் செய்ய மறுத்து, என் விருப்பத்திற்கு காதல் திருமணம் செய்த என்னை தனிமைப்படுத்தி வீண் மன உளைச்சலுக்கு ஆளாக்குவது தான் அவரது நோக்கம்.

கடந்த 21 ஆண்டுகளாக என்னை தனிமைப்படுத்தும் நோக்கில் சாதிய வன்கொடுமையை இன்று வரை தொடர்ச்சியாக பல விதங்களில் பல நிகழ்வுகளில் பழ கருப்பையா செய்து வருகிறார். வருகிற 29ம் தேதி கண்டரமாணிக்கத்தில் நடக்க உள்ள சதாபிஷேக விழாவிற்கு என்னை அழைக்கக்கூடாது என விழா நடத்துபவர்களுக்கு பழ கருப்பையா அழுத்தம் கொடுத்துள்ளார்.

எங்களது காரைக்குடி பூர்வீக வீட்டில் 5ல் 3 பங்கு வைத்திருக்கும் என்னை அடிப்படை வசதிகள் செய்து கொள்வதற்கும் சேதமடைந்த பகுதிகளை செப்பனிடுவதை தடுக்கவும் பழ கருப்பையா பல இன்னல்களை கொடுத்து வருகிறார். பழ கருப்பையா சாதிய வன்முறை செய்து வருவதில் இருந்து தடுக்கவும், எனக்கு பாதுகாப்பு வழங்கவும் அதனையும் மீறி தொந்தரவு செய்தால் அவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் இயக்குனர் கரு பழனியப்பன் கூறியிருக்கிறார். பழ கருப்பையா, தனது சொந்த பெரியப்பா மீதே இப்படி ஒரு புகார் அளித்திருப்பது கோலிவுட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்