- Advertisement -
Homeபொழுதுபோக்குதடையை கடந்து வந்த கருப்பு ரசிகர்களின் மனங்களை வென்றாரா? 18ம் படி சாமியாக வந்த நடிகர்...

தடையை கடந்து வந்த கருப்பு ரசிகர்களின் மனங்களை வென்றாரா? 18ம் படி சாமியாக வந்த நடிகர் சூர்யா கம்பேக் வந்தாரா? – கருப்பு படம் எப்படி இருக்கு?

- Advertisement -

ரெட்ரோ படத்துக்கு பிறகு ஓராண்டு இடைவெளிக்கு பின்பு நடிகர் சூர்யா நடிப்பில் இன்று கருப்பு படம் ரிலீஸாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. கருப்பு படத்தின் கதை இதுதான். நீதிமன்றத்தில் மறுக்கப்படும் நீதியை பெற்றுத் தர அந்த கருப்பசாமியே மனித வடிவில் வருகிறார் என்பதுதான் மையக் கதை.

சென்னையில் ஏழுகிணறு என்ற பகுதியில் குற்றவியல் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் வக்கீல் பேபி கண்ணன் என்கிற ஆர்ஜே பாலாஜி. அங்கு நீதி கேட்டு வருபவர்களை இழுத்தடித்து லஞ்சம் வாங்கி வழக்கு விசாரணைகளை தாமதம் செய்வது, பணத்திற்காக நேர்மைக்கு எதிராக செயல்படுவது என்று ஆர்ஜே பாலாஜியின் கேரக்டர் இருக்கிறது.

- Advertisement -

அவரிடம் தொலைந்து போய் கண்டுபிடிக்கப்பட்ட தனது நகைகளை நீதிமன்றம் மூலம் பெற்று தருமாறு ஒரு தந்தையும் அவரது மகளும் வருகின்றனர். அதிக சவரன் நகைகள் என்பதால் அவர்களது வழக்கை இழுத்தடிக்கும் வக்கீல் பேபி கண்ணன், ஒரு கட்டத்தில் அந்த தந்தையை அடித்து விரட்டுகிறார்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் கருப்பசாமியிடம் கண்ணீர் விட்டு அந்த தந்தை அழுகிறார். தனக்கு நீதி கிடைக்க உதவ வேண்டுகிறார். அதனால் கருப்பசாமியான சூர்யா, மனித அவதாரம் எடுக்கிறார். இந்த வழக்கை கடவுளாக வரும் சூர்யா மனித சக்தியாக வழக்கை முடிக்க நினைக்கிறார். ஆனால் வேறு ஒரு திருப்பம் ஏற்படுகிறது.

- Advertisement -

நீதி வழங்க வேண்டிய மனிதர்களை நீதிக்காக கடவுள் எதிர்க்கும் இந்த கதையில் பல விஷயங்கள் நடக்கின்றது. இதுதான் கருப்பு படத்தின் கதை. படம் ஆரம்பித்து 30 நிமிடங்கள் கழித்துதான் சூர்யா வருகிறார். ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறார். ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருந்த சூர்யாவுக்கு கருப்பு படம் நல்ல ஒரு கம்பேக் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் வரும் ஆக்சன் காட்சிகளும் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளன. வில்லனாக ஆர்கே பாலாஜி நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் வேறு ஒரு வில்லன் நடிகர் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மொத்தத்தில் கருப்பு படம் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்றுதான் படம் பார்த்த ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்