- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் சேதுபதியை ஜெயிக்க வைத்த மகாராஜா, மெகா ஹிட் படம் கொடுத்துட்டு இப்படி ஒரு முடிவை...

விஜய் சேதுபதியை ஜெயிக்க வைத்த மகாராஜா, மெகா ஹிட் படம் கொடுத்துட்டு இப்படி ஒரு முடிவை எடுத்துட்டாரே?- ஆனா மத்த ஹீரோக்கள் இதுக்கு சரிப்பட்டு வருவாங்களா?

- Advertisement -

சினிமா துறையை பொருத்த வரை ஜெயித்தவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும், அவர்களை ஒரு கட்டத்தில் தோற்றுப் போய் விட்டால் அவர்களை கண்டுக்கொள்ளாமல் அலட்சியப்படுத்துவதும் காலம் காலமாக வழக்கமாக நடக்கின்ற ஒன்றுதான். இதில் யாருமே விதிவிலக்கல்ல.

இது சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் இந்த நிலை இருக்கிறது. பதவியில், அதிகாரத்தில் உள்ள போது ஒருவர் கொண்டாடப்படுவதும், பதவியில், அதிகாரத்தில் இல்லாத போது அவர்களை அலட்சியப்படுத்துவதும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. குடும்பத்திலும் கூட 2 மகன்களில் நிறைய சம்பாதிக்கும் ஒரு மகனுக்கு கிடைக்கும் மரியாதை, குறைவாக சம்பாதிக்கும் மற்றொரு மகனுக்கு பெற்ற தாயிடம் கூட கிடைக்காது என்பதுதான் யதார்த்தமான உண்மை.

- Advertisement -

அதுபோல் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கண்டுக் கொள்ளப்படாத ஒரு நடிகராக இருந்தவர் விஜய் சேதுபதி. ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி நடிக்காத படங்களே இல்லை என்கிற அளவுக்கு பல படங்களில் கமிட் ஆன அவர், ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளே இல்லாத அளவுக்கு, தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் கண்டுக்கொள்ளாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டது காலத்தின் சூழ்நிலைதான்.

ஆனால் இப்போது அவரது 50வது படம் மகாராஜா மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. மிக அற்புதமான ஒரு திரைக்கதையில் உருவான இந்த படத்தில், விஜய் சேதுபதி மட்டுமின்றி படத்தின் ஒவ்வொரு கேரக்டருமே ரசிகர்களின் மனதில் நிற்கிறது. குறிப்பாக சிங்கம்புலி, நட்டி, மணிகண்டன், அனுராக் காஷ்யப், அபிராமி என அவர்களது நடிப்பு வேற லெவலில் இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுக்கும் சில ஹீரோ நடிகர்கள் எடுக்கும் முடிவை, பிளாக்பஸ்டர் வெற்றி படத்தை கொடுத்துள்ள நடிகர் விஜய் சேதுபதி எடுத்திருக்கிறார். இதுதான் கோலிவுட் வட்டாரத்தில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மெகா ஹிட் படம் கொடுக்கும் ஹீரோக்கள் தங்களது சம்பளத்தை உடனே உயர்த்தி விடும் நிலையில், விஜய் சேதுபதி தனது சம்பளத்தை வெகுவாக குறைத்திருக்கிறார்.

ஒரு படத்தில் நடிக்க ரூ. 15 கோடி முதல் ரூ. 17 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த விஜய் சேதுபதி, இப்போது தனது சம்பளத்தை ரூ. 10 கோடியாக குறைத்திருக்கிறார். இனி ரூ. 10 கோடி மட்டுமே தனது சம்பளம் என்று அவர் முடிவு செய்திருக்கிறார். ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில், நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில், விஜய் சேதுபதி தானாகவே முன்வந்து இந்த சலுகையை செய்திருக்கிறார். நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் வாங்கும் ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்றவர்களும் இந்த முடிவுக்கு வந்தால், தமிழ் சினிமா மேலும் வளரும், இன்னும் சுபிட்சமாக வாழும் என்பது உறுதி.

- Advertisement -

சற்று முன்