- Advertisement -
Homeபொழுதுபோக்குகருப்பு படம் திரைக்கு வருவது எப்போது? - தயாரிப்பாளர் எடுத்த முடிவால் விரக்தியில் நடிகர்...

கருப்பு படம் திரைக்கு வருவது எப்போது? – தயாரிப்பாளர் எடுத்த முடிவால் விரக்தியில் நடிகர் சூர்யா ரசிகர்கள்!

- Advertisement -

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் சூர்யா நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் மிக மோசமான தோல்வி படங்களாக இருந்து விட்டன. குறிப்பாக அஞ்சான் என்ஜிகே தானா சேர்ந்த கூட்டம் எதற்கும் துணிந்தவன் கங்குவா படங்கள் மிக மோசமான தோல்வியை தழுவியது.

அதிலும் கங்குவா படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. 300 கோடி ரூபாய்க்கு மேல் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் மிக மோசமான படமாக விமர்சிக்கப்பட்டதால் பெரிய தோல்வி படமாக சூர்யாவுக்கு மாறிவிட்டது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் சூர்யா கங்குவா படத்துக்கு பிறகு நடித்த ரெட்ரோ படம் கடந்த ஆண்டு மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியானது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் படத்தை டைரக்ட் செய்திருந்தார். இந்த படம் வணிகரீதியான வெற்றிப் படம் என அறிவிக்கப்பட்டாலும் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றது.

ரெட்ரோ படம் வெளியாகி இப்போது 9 மாதங்கள் கடந்த நிலையில் நடிகர் சூர்யா நடித்த அடுத்த படம் கருப்பு இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. கடந்தாண்டு தீபாவளிக்கு கருப்பு படம் ரிலீஸ் என்று ஒரு தகவல் வெளியானது. ஆனால் 3 மாதங்களுக்கு மேலாகியும் கருப்பு படம் திரைக்கு வரவில்லை. வருகிற 19ம் தேதி கருப்பு படம் ரிலீஸ் என்று ஒரு தகவல் சமீபத்தில் பரவியது.

- Advertisement -

ஆனால் பிறகு மார்ச் 19ம் தேதிக்கு கருப்பு படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஜனநாயகன் படம் ரிலீஸ் காரணமாக கருப்பு படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது மார்ச் 19ம் தேதியல்ல, வருகிற ஏப்ரல் 10ம் தேதி தான் கருப்பு படம் ரிலீஸ் ஆக உள்ளதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே கருப்பு படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, இந்த படத்தை ரூ. 200 கோடிக்கு மேல் பிஸினஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அதில் டிஜிட்டல் உரிமம் விலை ரூ. 75 கோடி வரை விற்க பேரம் பேசி வருவதாகவும் தகவல் சொல்லப்படுகிறது. ஓடிடி நிறுவனங்களிடம் இன்னும் இதற்கான பேரம் படியாததால் கருப்பு படம் ரிலீஸ் தொடர்ந்து தாமதமாகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்