- Advertisement -
Homeபொழுதுபோக்குப்ளடி பெக்கர் படத்தில் கவின் செய்யும் சேட்டை... இணையத்தில் வைரலாகும் வீடியோ... காட்சிக்கு ஐடியா கொடுத்த...

ப்ளடி பெக்கர் படத்தில் கவின் செய்யும் சேட்டை… இணையத்தில் வைரலாகும் வீடியோ… காட்சிக்கு ஐடியா கொடுத்த இயக்குனர் நெல்சன்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களின் மிக முக்கியமானவர் கவின். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரது இல்லங்களிலும் மனங்களிலும் குடியேறிய கவின், தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதில் அவர் கதாநாயகனாக நடித்து வெளியான லிப்ட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

 

- Advertisement -

பிறகு டாடா திரைப்படத்தில் கவின் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. படத்தின் வெற்றி ஒரு பக்கம் இருக்க தனது தேர்ந்த மற்றும் அதிர்ச்சியான நடிப்பின் மூலம் பலரது பாராட்டையும் கவின் பெற்றார்.

 

- Advertisement -

இந்தப் படத்தைத் தொடர்ந்து கவினுக்கு புதுப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதில் அண்மையில் அவர் நடித்த ஸ்டார் திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய அளவில் அந்த திரைப்படம் எதிர்பார்க்கப்பட்டிருந்த சூழலில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அது பூர்த்தி செய்யவில்லை.

 

விமர்சன ரீதியாக படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் 2கே கிட்ஸ்கள் படத்தை லைக் செய்ததால், வசூல் ரீதியாக ஸ்டார் திரைப்படம் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது அவர் நடித்திருக்கும் பிளடி பெக்கர் திரைப்படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

 

இயக்குனர் நெல்சன் இந்த திரைப்படத்தின் மூலம் முதல்முறையாக தயாரிப்பாளராக அறிமுகம் ஆகிறார். அவரிடம் உதவியாளராக இருந்த சிவபாலன் முத்துக்குமரன் தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் ரெடின் கிங்ஸ்லியும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிச்சைக்காரன் கெட்டப்பில் கவின் நடித்திருக்கிறார். அவரது தோற்றமே பலரும் ஆச்சரியப்படும் வகையில் அமைந்துள்ளது.

 

இந்த நிலையில் அந்த திரைப்படத்திலிருந்து வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் போக்குவரத்து சிக்னலின் போது ஆட்டோக்காரரிடம் கவின் பிச்சை கேட்கிறார். அவர் கொடுக்க மறுக்க எனக்கு மட்டும் கால் நன்றாக இருந்தால் ஆட்டோ ஒட்டி இருப்பேன் என்று கவின் தெரிவிக்கிறார். உடனே இரக்கப்பட்டு ஆட்டோக்காரர் பணத்தை கொடுக்க, அங்கு திடீரென பறை இசையுடன் சாவு ஊர்வலம் நடைபெறுகிறது. அதற்கு கவினும் எழுந்து நின்று ஆடுகிறார். இதைப் பார்த்து ஆட்டோ ஓட்டுனர் அதிர்ச்சி அடைய, பிளடி பெக்கர் என டைட்டில் வருகிறது. சுவாரசியமாக இருக்கும் இந்த வீடியோவிற்கு ஐடியா கொடுத்தது நெல்சன் தான் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

- Advertisement -

சற்று முன்