தமிழ் சினிமாவில் தற்போது நிறைய திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் கவின். சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளி திரைக்கு வந்த அவர், வளரும் முக்கிய நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார். ஆரம்பத்தில் இயக்குனராகும் கனவில் தான் அவர் திரைத்துறையில் அடி எடுத்து வைத்தார்.
தொடர்ந்து சீரியல் நடிக்க வாய்ப்பு அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது என அவரது ரேஞ்ச் உயர்ந்ததால், பலராலும் கவின் அறியப்பட்டார். அவருக்கு ஹீரோவாக முதல் திரைப்படமாக அமைந்தது லிப்ட். விமர்சன ரீதியாக அந்த திரைப்படம் வரவேற்பு பெற, தொடர்ந்து டாடா படத்தில் நடித்தார்.
அதுவும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரிலீசானது. முக்கியமாக கவின் பொறுப்பை உணர்ந்து மிகவும் முதிர்ச்சித் தன்மையுடன் நடித்திருப்பதாக பலரும் பாராட்டினர். இந்தப் படத்தை தொடர்ந்து கவினுக்கு திரைப்படத்தின் வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.
இதில் அவர் இயக்குனர் இளனுடன் இணைந்து பணியாற்றிய ஸ்டார் திரைப்படம், அண்மையில் வெளியானது. இதன் ட்ரெய்லர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வந்த நிலையில், படம் நினைத்து அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. மிகவும் தொய்வான திரைக்கதை இருந்ததால், படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுக்கவில்லை.
இருப்பினும் வசூல் ரீதியாக அந்த திரைப்படம் வெற்றி பெற்றது. தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவின் பிஸியாக நடித்து வருகிறார். நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இதேபோல், நயன்தாராவுடனும் கவின் ஜோடி சேர்ந்து படத்தில் நடித்து வருகிறார்.
இருப்பினும் ஸ்டார் திரைப்படம் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுக்காததால், அந்தத் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை இன்னும் எந்த சேனலும் வாங்கவில்லை. இதேபோல் நெல்சன் தயாரிப்பில் அவர் நடித்திருக்கும் பிளடி பெக்கர் திரைப்படத்தையும் வாங்கி இருந்த ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம், கடைசி நேரத்தில் கை விரித்து விட்டது. இதனால் கவின் மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களும் கலக்கமடைந்துள்ளனர்.





