- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னுடைய குழந்தை அது… பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள் - யூத்படத்தின் இயக்குனர் கென் கருணாஸ் நெகிழ்ச்சி!

என்னுடைய குழந்தை அது… பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள் – யூத்படத்தின் இயக்குனர் கென் கருணாஸ் நெகிழ்ச்சி!

- Advertisement -

காமெடி நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ் ஏற்கனவே அசுரன் வாத்தி விடுதலை 2 போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இப்போது அவரே கதாநாயகனாக நடித்துள்ள படம் யூத். இந்த படத்தை அவரே டைரக்ட் செய்தும் இருக்கிறார். யூத் படம் இன்று தியேட்டர்களில் வெளியான நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நடிகர் கென் கருணாஸ் கூறியிருப்பதாவது, சினிமா மீது நான் காதல் கொண்ட நாள் முதல் மற்ற அனைத்தும் மெல்ல மெல்ல எனக்கு இரண்டாம் பட்சமாகி விட்டது. அது வெறும் பார்வையாக மட்டுமில்லை. என் வாழ்க்கையின் ஒன்றாகவே மாறிவிட்டது.

எனக்கு இப்போது 24 வயது ஆகிறது. ஆனால் குழந்தை பருவத்திலிருந்து இன்றுவரை என்னுடன் தங்கி இருக்கிற ஒரே விஷயம் சினிமா மட்டும் தான். எந்த ஒரு சூழலிலும் சினிமா என்னை கைவிடவில்லை. யூத் படத்தில் இனி வேலை செய்ய முடியாது என்பது என்னால் நம்ப முடியவில்லை. இவ்வளவு நாட்கள் அது என் சொந்த குழந்தை போலவே இருந்தது.

இத்தனை நாட்களாக தூங்கும் வரை அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஹீரோவாக அழகான ஒரு கதையில் வாழ்ந்தேன். ஒரு இயக்குனராக என்னுடைய சொந்த பாதையை கண்டடைந்தேன். ஒவ்வொரு காட்சியும் என் மனதுக்கு நெருக்கமாக இருந்திருக்கிறது.

இந்த படம் என்னை உடைத்த நாட்களும் இருந்தன. என்னை உருவாக்கிய நாட்களும் இருந்தன. ஆனால் எப்போதும் நான் ஏன் சினிமா பயணத்துக்கு வந்தேன் என்பதை இந்த படம் நினைவூட்டி கொண்டே இருந்தது. இந்த படத்தை உங்களை மனதில் வைத்துதான் உருவாக்கினேன்.

நீங்கள் எங்கு புன்னகைப்பீர்கள், எங்கு என்னோடு இணைவீர்கள், எப்படி உணர்வீர்கள் என எப்போதும் யோசித்துக் கொண்டே இருந்தேன். என்னுடைய யூத் படம் உங்களுடையதாக மாறுகிறது. அதை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். நான் அதனை நேசித்ததை விட அதிகமாக நீங்கள் நேசியுங்கள் என்று கென் கருணாஸ் அந்த பதிவில் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

சற்று முன்