- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி ஷூட்டிங்கில் பரபரப்பாக செயல்படும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்த தரமான சம்பவத்துக்கு ரெடி ஆயிட்டாரா?...

கூலி ஷூட்டிங்கில் பரபரப்பாக செயல்படும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்த தரமான சம்பவத்துக்கு ரெடி ஆயிட்டாரா? – கைதி 2 லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

வேட்டையன் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு 4 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் நிலையில், வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் முடித்துவிட திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் பரபரப்பாக படப்பிடிப்பு தளத்தில் லோகேஷ் கனகராஜ் செயல்பட்டு வருகிறார்.

கூலி படத்தை முடித்தவுடன் நடிகர் ரஜினிகாந்த் அடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 படப்பிடிப்பை துவங்க உள்ளார். அந்த படத்துக்கான ஸ்கிரிப் பணிகளை செய்து முடித்துள்ள இயக்குனர் நெல்சன், அந்த படத்தை உருவாக்க 1 ஆண்டு 1 மாதம், அதாவது மொத்தம் 13 மாதங்கள் தனக்கு கால அவகாசம் தேவை என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளார்.

- Advertisement -

ஏனென்றால் இந்தியன் 2 படுதோல்வி அடைந்தது. கங்குவா படமும் பிளாப் ஆனது. அதனால் ஜெயிலர் 2 படத்தை எல்லாவிதங்களிலும் ரசிகர்கள் விரும்பும் ஒரு பான் இந்தியா படமாக உருவாக்க வேண்டும் என்றால், தனக்கு 13 மாதங்கள் கால அவகாசம் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்று நெல்சன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அதனால் அடுத்த 2026ம் ஆண்டில் ஏப்ரல் அல்லது தீபாவளிக்குதான் ஜெயிலர் 2 ரிலீஸாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நடிகர் ரஜினிகாந்த், 2025ம் ஆண்டு தனது, சினிமா பயணத்தில் பொன்விழா ஆண்டு என்பதால் கூலி, ஜெயிலர் 2 படங்களை இந்த ஆண்டிலேயே ரிலீஸ் செய்து தனது ரசிகர்களுக்கு ட்ரீட் தர திட்டமிட்டார். அது தற்போது நிறைவேற வாய்ப்பில்லை என தெரிய வந்துள்ளது.

- Advertisement -

இதற்கிடையே கூலி படப்பிடிப்பை முடித்த பிறகு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து கார்த்தி நடிப்பில் கைதி 2 படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார். அதாவது கூலி படம் ரிலீஸ்க்கு முன்பே, கைதி 2 படப்பிடிப்பை ஆரம்பித்து விடுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்கேற்ப இப்போது ப்ரீ புரடக்சன் பணிகளும் துவங்கி விட்டது.

அதன்படி கைதி 2 படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகைகளின் கால்ஷீட் தேதிகள் பெறும் பணிகள் இப்போது வேகமாக நடந்து வருகின்றன. அதனால் கூலி படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே கைதி 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்படைந்து விடும் வகையில் ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த படத்தில் நடிகர் சூர்யாவும் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்