நடிகர் விஜய் நடித்த கில்லி படம், கடந்த 20ம் தேதி ரி – ரிலீஸ் செய்யப்பட்டு, இப்போது தியேட்டர்களில் சக்கை போடு போட்டு வருகிறது. கடந்த 20ம் தேதி முதல் நான்கு நாட்களில், உலகம் முழுவதும் 15 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக கில்லி படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் இப்போது பள்ளி, கல்லூரிகள் கோடை விடுமுறையில் இருப்பதால், குடும்பம் குடும்பமாக வருபவர்களும் அதிகளவில் வருகின்றனர். தவிர பள்ளி மாணவ மாணவிகளும், கல்லூரி மாணவ மாணவிகளும் அதிக அளவில் கில்லி படத்தை பார்க்க அதிக அளவில் வருகின்றனர். ஏனெனில் கடந்த 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது.
டைரக்டர் தரணி இயக்கிய கில்லி படத்தில் கபடி வீரராக விஜய், தனலட்சுமி என்ற கேரக்டரில் திரிஷா, போலீஸ் அதிகாரியாக ஆஷிஷ் வித்யார்த்தி, வில்லனாக பிரகாஷ்ராஜ், காமெடி நடிப்பில் தாமு, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது மீண்டும் ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்பில், கில்லி படம் தியேட்டர்களில் மாஸ் காட்டி ஓடிக்கொண்டிருக்கிறது.
கில்லி படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ஜெமினி படம் மூலம் அறிமுகமான நடிகை கிரண்தான். அன்பே சிவம், வில்லன், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்த கிரண், ஒரு கட்டத்தில் கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டார். பிறகு சமூக வலைதளங்களில் தனது உச்சகட்ட ஆபாசமான வீடியோக்களை வெளியிடுவது, ஆபாச புகைப்படங்களை வெளியிடுவது என இப்போது அவரது லைஃப் ஸ்டைல், ரசிகர்களின் முகம் சுளித்து அருவறுக்கும் அளவுக்கு இருக்கிறது.
இந்நிலையில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் நடிகை கிரண் அளித்த பேட்டி ஒன்றில், கில்லி படத்தில் திரிஷா நடித்த தனலட்சுமி கேரக்டரில் நடிக்க என்னிடம்தான் முதலில் பேசினார்கள். கில்லி படத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள். ஆனால், நான் அப்போது காதலித்துக் கொண்டிருந்ததால் அந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன். இப்போது அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருப்பதை பார்க்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.
எனக்கு வந்த நல்ல வாய்ப்பை நான் தவற விட்டுவிட்டேன். நான் அப்போது மிக தவறான முடிவை எடுத்துவிட்டேன் என்று பிறகுதான் தெரிந்தது. அதற்காக மிகவும் வருத்தப்பட்டேன் என்று கூறியிருக்கிறார். கில்லி படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த பேட்டி இப்போது வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், நல்லவேளை கில்லி படத்தில், நீங்கள் திரிசா கேரக்டரில் நடிக்கவில்லை. கில்லி படம் தப்பித்தது என்று பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்





