- Advertisement -
Homeபொழுதுபோக்குமறுபடியும் ரிஸ்க் எடுக்கறாங்களோ… ஏஐ தொழில்நுட்பத்தில் மீண்டும் திரைக்கு வரும் ரஜினி படம் - இந்த...

மறுபடியும் ரிஸ்க் எடுக்கறாங்களோ… ஏஐ தொழில்நுட்பத்தில் மீண்டும் திரைக்கு வரும் ரஜினி படம் – இந்த முறையாவது ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்குமா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் டைரக்ட் செய்த படம் கோச்சடையான். இந்த படத்தின் கதையை எழுதியவர் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார். கோச்சடையான் படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த படம் அனிமேசன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட படமாக இருந்தது.

கடந்த 2014ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இந்தி நடிகை தீபிகா படுகோன் மற்றும் நடிகர் சரத்குமார் ஆதி ஷோபனா ருக்மணி விஜயகுமார் ஜாக்கி ஷெராப் நாசர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணி செய்தார்.

- Advertisement -

ரஜினிகாந்த் இருக்கும்போதே அவரை நேரடியாக திரையில் காட்டாமல் அவரை நடிக்க வைத்து 3டி தொழில்நுட்பத்தில் அனிமேசன் படமாக கோச்சடையான் படம் வெளியானது ரஜினி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. கதை சிறப்பாக இருந்தும் திரையில் வெறும் பொம்மைகளாக ரஜினிகாந்த் போன்ற மாஸ் நடிகரை காண ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது.

அதனால் கோச்சடையான் படம் ரஜினிக்கு பெரிய தோல்வி படமாக அமைந்தது. 11 ஆண்டுகளுக்கு முன்பே ரூ. 125 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பிளாப் ஆனது ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது. இந்த படத்தின் ஷூட்டிங்கின் போதுதான் ரஜினிக்கு உடல் நலம் கடுமையாக பாதித்து வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று திரும்பி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதன்பிறகுதான் தனது மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவரையும் அழைத்து இனிமேல் உங்களுக்கு படங்கள் டைரக்‌ஷன், தயாரிப்பு போன்றவை வேண்டாம் என்றும் கண்டிஷனாக கூறிவிட்டார். ஆனாலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் ரஜினி நடித்த லால் சலாம் என்ற படத்தை டைரக்ட் செய்தார். ஆனால் படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனம்தான் பலத்த நஷ்டத்தை சந்தித்தது.

இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு முன் அனிமேஷனில் வெளிவந்த கோச்சடையான் படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஆனால் இந்த முறை படத்தில் உள்ள குளறுபடியான காட்சிகளை எல்லாம் ஏஐ தொழில்நுட்பத்தில் மாற்றி திருத்தம் செய்து புதுப்பொலிவுடன் செளந்தர்யா ரஜினிகாந்த் தர இருக்கிறார். இந்த முறையாவது கோச்சடையான் ரசிகர்களை கவர்வாரா, என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

சற்று முன்