- Advertisement -
Homeபொழுதுபோக்குகுபேரா படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்… ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற அதர்வா நடித்த...

குபேரா படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்… ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற அதர்வா நடித்த டிஎன்ஏ முதல் நாள் வசூல் எவ்வளவு?

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான படம் குபேரா. தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கிய இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனாவும் முக்கிய கேரக்டரில் நாகர்ஜூனாவும் நடித்திருக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான குபேரா படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

பிச்சைக்காரனாக இருக்கும் ஹீரோ, பெரிய குபேரனாக மாறுவதுதான் படத்தின் கதை. இதில் நடிப்பில் தனுஷ் வேற லெவலில் ரசிகர்களை அசத்தியிருக்கிறார். சீனியர் நடிகரான நாகர்ஜூனா, தனது அனுபவம் மிக்க நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார். தொடர்ந்து தமிழில் நாகர்ஜூனா ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

குபேரா படத்துக்கு முதல் நாளிலேயே பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்து வருவதால் இந்த படம் பெரிய அளவில் வசூலிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தி தெலுங்கு தமிழ் மலையாளம் கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக குபேரா வெளியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே போல் நேற்று நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான டிஎன்ஏ படத்துக்கும் பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்து வருகிறது. நடிகர் முரளியின் மகன் அதர்வா, பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர். ஈட்டி பரதேசி 100 சண்டிவீரன் இமைக்கா நொடிகள் என பல வெற்றிப் படங்களை கொடுத்த அதர்வா, சில ஆண்டுகளாக சரியான பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் நேற்று வெளியான டிஎன்ஏ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் அதர்வாவுடன் நிமிஷா சஜயன் ரமேஷ் திலக் பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

இதற்கிடையே முதல் நாளில் குபேரா டிஎன்ஏ படங்களின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நேற்று உலகம் முழுவதும் முதல் நாளில் தனுஷ் நடித்த குபேரா படம் ரூ. 25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதே போல் அதர்வா நடித்த டிஎன்ஏ படம் முதல் நாளில் 80 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளது. இது நல்ல படங்களுக்கு கிடைக்கும் நல்ல ஓபனிங் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்