- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் நடித்த படங்களில் அந்த 2 படங்களுக்கு பிறகு 3வது பெரிய பிளாப் படம் குபேரா...

தனுஷ் நடித்த படங்களில் அந்த 2 படங்களுக்கு பிறகு 3வது பெரிய பிளாப் படம் குபேரா தான் – வெளியான முக்கிய தகவல்!

- Advertisement -

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் டாப் 10 வரிசை நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். துள்ளுவதோ இளமை படத்தில் துவங்கி குபேராத படம் என இதுவரை 51 படங்களில் நடிகர் தனுஷ் நடித்திருக்கிறார். இதுதவிர பல படங்களில் சொந்த குரலில் பாடியிருக்கிறார். ஒண்டர்ஃபார் பிலிம்ஸ் என்ற நிறுவனம் மூலம் சினிமா தயாரிப்பாளராகவும் உள்ளார்.

ப பாண்டி ராயன் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் இட்லி கடை என இதுவரை 4 படங்களை டைரக்ட் செய்திருக்கிறார். இதில் 3 படங்கள் வெளியான நிலையில் ராயன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ப பாண்டி சுமாரான வரவேற்பை பெற்றது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் பிளாப் ஆனது. இட்லி கடை சில மாதங்களில் திரைக்கு வர உள்ளது.

- Advertisement -

தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் குபேரா. இதில் பிச்சைக்காரனாக தேவா என்ற கேரக்டரில் தனுஷ் நடித்திருந்தார். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என 5 மொழிகளில் இந்த படம் வெளியானது. உலகளவில் மொத்தமாக இந்த படம் 118 கோடி ரூபாய் வசூலித்தது.

அதிலும் குறிப்பாக தெலுங்கு மாநிலங்களில் குபேரா படம் 55 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. ஆனால் தமிழ்நாட்டில் குபேரா படத்தின் மொத்த வசூல் 17 கோடி ரூபாய்தான். படம் வெளியான 2 தினங்களுக்கு பிறகு பல தியேட்டர்களில் 50 பேர் கூட ரசிகர்கள் இல்லை என்ற அவல நிலையே ஏற்பட்டது. ஒரே வாரத்தில் இந்த படத்தை எடுத்துவிட்டு நேற்று முன்தினம் வெளியான மார்கன் படம் திரையரங்குகளில் ஓடுகிறது.

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 51 படங்களில் இதுவரை 4 படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த நிலையில் குபேரா 5வது படமாக 100 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது. இது சாதனையாக பார்க்கப்பட்டாலும் தமிழ்நாட்டில் குபேரா படம் வெற்றி அடையாமல் பிளாப் ஆகி விட்டது. அதே போல் மிக மோசமான தோல்வியை தழுவிய தனுஷ் படங்களில் இது 3வது படம் என்ற முக்கிய தகவலும் வெளியாகி உள்ளது.

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் கீர்த்தி சுரேஷ் தம்பி ராமையாக கருணாகரன் ராதாரவி உளளிட்டோர் நடித்த படம் தொடரி. முழுக்க முழுக்க ரயிலில் நடக்கும் சம்பவங்களை கதைக்களமாக கொண்ட தொடரி படம் பெரிய பிளாப் ஆனது. அதே போல் தனுஷ் சமந்தா எமிஜாக்சன் கேஎஸ் ரவிக்குமார் ராதிகா நடித்த தங்க மகன் படமும் பிளாப் ஆனது. அந்த வரிசையில் இப்போது 3வது படமாக குபேராவும் இணைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்