- Advertisement -
Homeபொழுதுபோக்குகில்லி சச்சின் படங்களை தொடர்ந்து அடுத்து ரி ரிலீஸாகும் விஜயின் சூப்பர் ஹிட் படம் -...

கில்லி சச்சின் படங்களை தொடர்ந்து அடுத்து ரி ரிலீஸாகும் விஜயின் சூப்பர் ஹிட் படம் – திருவிழாவா கொண்டாடுங்கடே… குஷியான தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போது ரி ரிலீஸ் டிரண்டிங் காலமாக இருந்து வருகிறது. 20 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகளுக்கு முந்தைய ஹிட் படங்கள் இப்போது ரி ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. குறிப்பாக 80ஸ் 90ஸ் கிட்ஸ் காலத்திய படங்கள் இன்றைய இளம் ரசிகர்களால் பெரிய அளவில் ரசிக்கப்படுகின்றன.

அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்த முத்து பாட்ஷா கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் விஜய் நடித்த கில்லி சச்சின் போக்கிரி ஆர்யா சந்தானம் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் ஜீவா சந்தானம் நடித்த சிவா மனசுல சக்தி எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற பல படங்கள் ரி ரிலீஸாகி பெரிய வரவேற்பை பெற்றன.

- Advertisement -

தொடர்ந்து இதே போல் பல சூப்பர் ஹிட் படங்களை ரி ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் படையப்பா பம்மல் கே சம்பந்தம் காதலுக்கு மரியாதை பிரண்ட்ஸ் என பல படங்கள் தொடர்ந்து வெளியாக உள்ளன. 4கே டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் அந்த படங்களை புதிய பொலிவுடன் ரசிகர்களின் பார்வைக்கு மீண்டும் கொண்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் இப்போது நடிகர் விஜயின் மற்றொரு சூப்பர் ஹிட் படம் விரைவில் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இயக்குனர் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் நடிகர் விஜய், ஜோதிகா நடிப்பில் உருவான படம் குஷி. இது கடந்த 2000ம் ஆண்டில் மே மாதம் வெளியானது. குஷி படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஒரு படமாகும்.

- Advertisement -

தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு தேனிசை சென்று தேவா இசையமைத்து இருந்தார். குஷி படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக விஜய் ஜோதிகா இடையேயான காதல் காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. தமிழில் மாஸ் ஹிட் ஆன குஷி படம் தொடர்ந்து இந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் வருகிற 25ம் தேதி வியாழக்கிழமை குஷி படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குஷி படம் தியேட்டர்களுக்கு வருவது தளபதி ரசிகர்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கில்லி படத்தை ரி ரிலீஸ் செய்த சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம்தான் குஷி படத்தையும் ரி ரிலீஸ் செய்கிறது. குஷி படத்தை தியேட்டர்களில் கொண்டாட இப்போதே தளபதி ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்