ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஜெயிலர்” மாபெரும் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் இடையே ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த “லால் சலாம்” திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர், “ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்திருக்கிறது. அதனை தொடர்ந்து தா.செ.ஞானவேல் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். அதன் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதனிடையே ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் வெளியாகிறது. இது ரஜினியின் கெரியரில் மறுபடியும் ஒரு பின்னடைவாக இருக்குமா?” என ஒரு கேள்வியை கேட்டார்.
அதற்கு பதிலளித்த அந்தணன், “ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்தது நிச்சயம் பின்னடைவாகத்தான் இருக்கும். ஜெயிலர் படம் மூலம் அவர் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்துவிட்டார். இதன் பிறகு அவருடைய கிராஃப் மேலேதான் போக வேண்டுமே தவிர கீழே இறங்ககூடாது.
அவர் ஒரு தவறான முடிவை எடுத்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். ஜெயிலர் படம் இவ்வளவு பெரிய ஹிட் அடிக்கும் என்று அவர் நினைத்திருக்க வாய்ப்பில்லை. அப்படி அவர் நினைத்திருந்தால் நிச்சயம் அவர் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு நீண்ட நாட்களாகவே ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் ரஜினிகாந்திற்கு தனது மகளின் மேல் நம்பிக்கை வரவில்லை. லால் சலாமில் கூட மோகன் லால் அல்லது மம்முட்டி நடிப்பதாகத்தான் அவர் ரஜினியிடம் கதையை கூறினார்.
ஆனால் ரஜினிக்கோ கதை பிடித்துவிட, இந்த கேமியோ ரோலை தானே செய்வதாக கூறிவிட்டார். அதில் ஏற்பட்ட திருப்பம்தான் இது. ஜெயிலர் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் லால் சலாம் திரைப்படத்தை ரஜினி படமாக புரொமோட் செய்தால் நிச்சயம் பின்னடைவுதான் ஏற்படும். ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்கிறார் என்பதை மிகப் பெரிய எழுத்தில் விளம்பரப்படுத்தினால்தான் பிரச்சனை இல்லாமல் இருக்கும்” எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





