- Advertisement -
Homeபொழுதுபோக்குதணிக்கை குழு பார்வைக்கு போகாத விடாமுயற்சி; இன்னும் டைரக்டர் அதையே ரெடி பண்ணலையாம் - ...

தணிக்கை குழு பார்வைக்கு போகாத விடாமுயற்சி; இன்னும் டைரக்டர் அதையே ரெடி பண்ணலையாம் – பொங்கலுக்கு படம் வருமா? திக் திக் மனநிலையில் ஏகே ரசிகர்கள்!

- Advertisement -

இதோ வருகிறது அதோ வருகிறது என்று புலி வந்த கதையாக விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற டீசர், கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது. ஏனெனில் துணிவு படத்துக்கு பிறகு 2 ஆண்டுகளாக அஜீத்குமார் படம் எதுவும் வரவில்லை. மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தை ரசிகர்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

கடந்த ஆண்டில் ஜனவரி மாதம் 10ம் தேதி பொங்கலுக்கு துணிவு படம் வெளியான நிலையில், அடுத்த படத்தில் நடிக்க அஜீத்குமார் ஆயத்தமானார். அந்த நேரத்தில் அவரது தந்தை சுப்ரமணி மறைந்துவிட்டார். அதற்கு பின் சில மாதங்களுக்கு பிறகு பைக் ரேஸ் சென்ற அஜீத்குமார், பிறகு மகிழ் திருமேனியை அழைத்து தன் அடுத்த படத்தை இயக்க வாய்ப்பளித்தார்.

- Advertisement -

அஜர்பைஜானில் கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய விடாமுயற்சி படப்பிடிப்பில், இந்த ஆண்டு ஜனவரியில் பொங்கலுக்கு அல்லது ஏப்ரலில் தமிழ் புத்தாண்டுக்கு இந்த படம் வெளிவந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசியாக தீபாவளிக்கு வந்துவிடும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் படப்பிடிப்பு ஜவ்வாக இழுத்த நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பு பாதியில் நின்றது. இந்த இடைவெளியில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி படப்பிடிப்பில் அஜீத்குமார் பங்கேற்றார். இப்போது விடாமுயற்சி, குட்பேட் அக்லி 2 படங்களின் ஷூட்டிங்கும் முடிவடைந்த நிலையில் வரும் ஜனவரியில் விடாமுயற்சி, மே 1ம் தேதி அஜீத்குமார் பிறந்த நாளில் குட் பேட் அக்லி படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று விடாமுயற்சி படம் தணிக்கைக்குழு பார்வைக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தணிக்கைக்குழுவுக்கு படம் போகவில்லை. காரணம், இன்னும் முதல் காப்பியை இயக்குனர் மகிழ் திருமேனி ரெடி செய்யவில்லை. இன்னும் தாமதமாகும் என்று கூறுகிறாராம்.

படப்பிடிப்பு துவங்கி பல மாதங்கள் ஆன நிலையில், விடாமுயற்சி படத்தை வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா புரடக்சன்ஸ் இருக்கிறது. ஆனால் தனக்கு நேர நெருக்கடி தருவதாக மகிழ் திருமேனி புலம்பிக்கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதனால் பொங்கலுக்கு ரிலீஸ் என லைகா நிறுவனம்தான் முடிவு செய்துள்ளது. இயக்குனர் மகிழ்திருமேனி அதற்கு தயாராக இருக்கிறாரா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.

- Advertisement -

சற்று முன்