- Advertisement -
Homeபொழுதுபோக்கு15 மாதங்களுக்கு பிறகு ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்த் படம் - ஹார்ட் டிஸ்க் கிடைச்சிருச்சாம்,...

15 மாதங்களுக்கு பிறகு ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்த் படம் – ஹார்ட் டிஸ்க் கிடைச்சிருச்சாம், நம்புங்க… இது உறுதியான தகவல்தான்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்தாண்டில் வெளியான படம் லால் சலாம். இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இதில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் விக்ராந்த் விஷால் விஷ்ணு தன்யா பாலகிருஷ்ணன் நிரோஷா தம்பி ராமையா விக்னேஷ் லிவிங்ஸ்டன் செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த 2024ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 9ம் தேதி வெளியானது.

- Advertisement -

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே 3 வை ராஜா வை ஆகிய 2 படங்களை டைரக்ட் செய்த நிலையில் 3வது படமாக லால் சலாம் படத்தை இயக்கினார். முதல் 2 படங்களை போலவே இந்த படமும் பிளாப் ஆனது. மிக மோசமான வசூலை பெற்ற நிலையில் இந்த படம் பார்த்த ரசிகர்கள் பலத்த அதிருப்தியடைந்தனர்.

வழக்கமான ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கும் படங்கள் பிளாப் ஆகி விடும் என்ற சென்டிமென்ட் தமிழ் சினிமாவில் இருக்கிறது. அந்த வரிசையில் லால் சலாம் படமும் தோல்வியடைந்து விட்டதாக பலரும் விமர்சித்தனர். இந்த படத்தின் தோல்விக்கு லைகா புரடக்சனஸ் சரியாக படத்தை புரமோட் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா கூறியது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதற்கிடையே லால் சலாம் படம் தியேட்டர்களில் ரிலீஸான நிலையில் 4 வாரங்கள் கழித்தும் 8 வாரங்கள் கழித்தும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவில்லை. தியேட்டரில் பார்க்காவிட்டாலும் ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சியது. சில நேரங்களில் லால் சலாம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்ற வதந்தி பரவி பரவி ரசிகர்களை விரக்தியடைய செய்தது.

லால் சலாம் படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க் காணாமல் போய்விட்டதால்தான், ஓடிடி தளத்தில் லால் சலாம் வெளியாகவில்லை என்றும் ஒரு தகவல் இருந்தது. இந்நிலையில் 15 மாதங்களுக்கு பிறகு வருகிற ஜூன் 6ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு லால் சலாம் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. காணாமல் போன ஹார்டு டிஸ்க் கிடைத்து விட்டதால், ஓடிடி தளத்தில் லால் சலாம் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்