- Advertisement -
Homeபொழுதுபோக்குவிளையாட்டு வினையாகி விட்டதா? லால் சலாம் படம் இன்னும் ஓடிடியில் வெளியாகாததற்கு காரணம் - இதுதான்...

விளையாட்டு வினையாகி விட்டதா? லால் சலாம் படம் இன்னும் ஓடிடியில் வெளியாகாததற்கு காரணம் – இதுதான் தனக்குத்தானே வெச்சுக்கிற ஆப்பா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த், கேமியோ ரோலில் நடித்து, கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது வெளியான படம் லால் சலாம். இந்த படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார். ஏற்கனவே இவர் 3, வை ராஜா வை என்ற 2 படங்களை இயக்கியவர். ஆனால் அந்த படங்கள் சரியாக போகவில்லை.

ஆனால், லால் சலாம் படம் மிகப்பெரிய வெற்றியை, வரவேற்பை பெறும் என்று முதலில் பரபரப்பாக பேசப்பட்டது. லைகா புரடக்சன் தயாரிப்பு நிறுவனம் பல கோடி செலவில் தயாரித்தது. ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் 45 நிமிடங்களுக்கு மேல் படத்தில் வருவதாக கூறப்பட்டது. அவருக்கு ஜோடியாக, ராம்கி மனைவியும் நடிகை ராதிகாவின் சகோதரியுமான நிரோஷா நடித்திருந்தார்.

- Advertisement -

லால் சலாம் படத்தில், இரட்டை ஹீரோக்களாக விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் தன்யா பாலகிருஷ்ணன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். பெரிய கார்பரேட் நிறுவனத்தின் தயாரிப்பு, ரஜினி கேமியோ ரோல், ஏஆர் ரகுமான் இசை என பெரிய அளவில் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் படம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் சொன்ன படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், படம் குறித்த விளம்பரத்தை படத்தை தயாரித்த லைகா புரடக்சன் நிறுவனம் சரியாக செய்யவில்லை. இது ரஜினி படம் என்பதே ரசிகர்களுக்கு தொியாமல் போய்விட்டது என்று பஞ்சாயத்தை கூட்டினார்.

- Advertisement -

ஆனால் மஞ்சும்மேல் பாய்ஸ் என்ற மலையாள படம் யார் நடித்தது, யார் டைரக்டர் எனத் தெரியாமல் ஹவுஸ்புல் காட்சிகளாக தமிழ்நாடு முழுக்க ஆயிரம் தியேட்டர்களில் ஓடியதே, அதை யார் விளம்பரப்படுத்தினார்கள் என்று ஐஸ்வர்யா குற்றச்சாட்டுக்கு, ரசிகர்கள் செக் வைத்து கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், லால்சலாம் படம் வெளியாகி இரண்டரை மாதங்கள் ஆகியும் இந்த படம் இன்னும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவில்லை. இதற்கு காரணம், லால் சலாம் படத்தின் 21 நாட்கள் எடுத்த புட்டேஜ் காணாமல் போனதாக ஐஸ்வர்யா ராய் சொன்ன பொய்தான். படம் ரிலீஸ் தள்ளிப் போவதால் ஒரு பொய்யை அவர் அவிழ்த்துவிட்டதால், லால் சலாம் படத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம், 21 நாட்கள் புட்டேஜ் இல்லாத அரைகுறையான படத்தை ஒளிபரப்ப முடியாது. படம் உரிமத்தை ரத்து செய்கிறோம். வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுங்கள் என, கேட்கிறது. இப்படி ஒரு இடியாப்ப சிக்கலில் இருக்கிறது லால் சலாம்.

- Advertisement -

சற்று முன்