இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் அறிமுகமான படம் வெண்ணிலா கபடிக்குழு. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கபடி விளையாட்டை மையமாக வைத்து திண்டுக்கல் மாவட்டம் பழனி கதைக்களத்தில் உருவான இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. நடிகர் சூரியின் பரோட்டா காமெடி இடம்பெற்றது இந்த படத்தில்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெண்ணிலா கபடிக்குழு படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஷால் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அதில் குள்ள நரிக்கூட்டம் முண்டாசுப்பட்டி ராட்சசன் மாவீரன் கிட்டு இன்று நேற்று நாளை கட்டாகுஸ்தி வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது.
கடந்த 2022ம் ஆண்டில் இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா லட்சுமி முனீஸ்காந்த் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்த படம் கட்டாகுஸ்தி. இந்த படத்தை நடிகர் விஷ்ணு விஷாலே தயாரித்தும் இருந்தார். ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமியை அவர் திருமணம் செய்வார். ஆனால் அவர் ஒரு கட்டாகுஸ்தி வீராங்கணை என்பதை மறைத்து இந்த திருமணம் நடக்கும்.
ஆனால் ஒரு கட்டத்தில் கோவில் விழாவில் தன் கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது, அவர் களத்தில் இறங்கி கட்டாகுஸ்தி வீராங்கணையாக மாறி எதிரியின் ஆட்களை அடித்து துவம்சம் செய்வார். இதை அறிந்த விஷ்ணு விஷால் மனைவியை வீட்டை விட்டு அனுப்பி விடுவார். கடைசியில் கட்டா குஸ்தி போட்டியில் மனைவியுடன் அவர் சண்டையிட தயாராகி விடுவார். கடைசியில் எதிர்பாராத திருப்பத்துடன் இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.
கட்டாகுஸ்தி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் கட்டாகுஸ்தி 2ம் பாகம் எப்போது என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர். இப்போது கட்டாகுஸ்தி 2ம் பாகம் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் சில படங்களில் இப்போது விஷ்ணு விஷால் பிஸியாக நடித்துக் கொள்கிறார். அந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு கட்டாகுஸ்தி 2 படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதனால் கட்டாகுஸ்தி 2 படம் வெளியாக இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் கட்டாகுஸ்தி 2ம் பாகத்திலும் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பாரா, அல்லது வேறு கதாநாயகி நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பொதுவாக முதல் பாகத்தில் நடித்த நடிகர் நடிகைகளே 2ம் பாகத்திலும் தொடர்வதுதான் வழக்கம். ஆனால் சாமி 2 படத்தில் திரிஷாவுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். அதேபோல் கட்டாகுஸ்தி 2 படத்திலும் அதேபோல் நடக்குமா? அல்லது ஐஸ்வர்யா லட்சுமியே இந்த படத்திலும் நாயகியாக தொடர்ந்து நடிப்பாரா என்பது ரசிகர்களுக்கு சந்தேகமாக உள்ளது.





