- Advertisement -
Homeபொழுதுபோக்குகாப்பியடிக்கறதே தமிழ் சினிமாவில் வழக்கமாகி விட்டதா? தீபாவளிக்கு வரும் ஒரு படம்… அந்த கொரியா படத்துல...

காப்பியடிக்கறதே தமிழ் சினிமாவில் வழக்கமாகி விட்டதா? தீபாவளிக்கு வரும் ஒரு படம்… அந்த கொரியா படத்துல இருந்து சுட்டதாமே? – என்ன கொடும சார் இது?

- Advertisement -

பள்ளிகளில் கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வறையில் பக்கத்தில் இருப்பவர்களை பார்த்து காப்பியடிப்பது, பிட் அடிப்பது என்பது தொடர்ந்து நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் இப்போதெல்லாம் தேர்வறைகளில் காப்பியடிப்பவர்களை விட சினிமாவில் மற்றவர்களின் கதைகளை மற்றவர்கள் இயக்கிய படங்களை காப்பியடிப்பதுதான் அதிகமாக நடந்து வருகிறது.

சொந்த சரக்கே இல்லாமல் ஒரு இயக்குனர் மற்றவரது படைப்பை காப்பியடித்தால் மற்ற ஒரு இயக்குனரின் படத்தை பார்த்து அந்த கதையை அப்படியே தன்னுடைய கதையாக படமாக்கினால் அது எவ்வளவு பெரிய இழுக்கு என்பதை பலரும் உணர்வதே இல்லை. இப்படி பல இயக்குனர்கள் செய்து வருவது தமிழ் சினிமா ரசிகர்களுக்கே வெறுப்பை தருகிறது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக சில இயக்குனர்கள் மலையாளம் இந்தி தெலுங்கு மராத்தி கொரியா மற்றும் ஹாலிவுட் கதைகளை திருடி தங்களது சொந்த படங்களாக உருவாக்கி விடுகின்றனர். இப்போதுள்ள தொழில் நுட்பத்தில் விஞ்ஞான வளர்ச்சியில் அனைத்து தரப்பு ரசிகர்களும் அனைத்து தரப்பு மொழி படங்களையும் பார்க்கின்றனர்.

அதனால் ஒரு படம் வெளியான சில மணி நேரங்களில் அல்லது அந்த படத்தின் டிரெய்லர் வெளியான சில மணி நேரங்களில் அந்த படத்தின் கதை இந்த படத்தில் இருந்து உருவியதுதான் என்பதை துல்லியமாக கண்டுபிடித்து விடுகின்றனர். அப்படிதான் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ள படங்களில் ஒரு படம் அப்பட்டமாக காப்பியடிக்கப்பட்ட படம் என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -

பார்க்கிங் லப்பர் பந்து படங்களை தொடர்ந்து நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் டீசல். இந்த படத்தை சண்முகம் முத்துசாமி டைரக்ட் செய்திருக்கிறார். அதுல்யா ரவி நாயகியாகவும் வினய் வில்லனாகவும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் கதை டீசல் திருட்டை மையப்படுத்தியது என்றும் படத்தில் பைப் லைன் மூலமாக டீசல் திருட்டு நடப்பது குறித்த கதைக்களத்திலும் உருவாகி உள்ளது.

இந்த படத்தின் நாயகன் ஹரீஷ் கல்யாணும், இயக்குனர் சண்முகம் முத்துசாமியும் சமீபத்தில் பேசிய போதும் இதை அவர்களே உறுதிப்படுத்தி உள்ளனர். படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில் அதில் வரும் காட்சிகளும் டீசல் திருட்டு பற்றிய கதையே என்று தெளிவுபடுத்துகிறது. கடந்த 2021ம் ஆண்டில் வெளியா பைப்லைன் என்ற கொரியா திரைப்படம் ஒன்று டீசல் திருட்டை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவாகி வெளியாகி உள்ளது. அதனால் இந்த படம்தான் டீசல் என வெளிவர உள்ளது. ஆக இதுவும் ஒரு காப்பியடிக்கப்பட்ட படம்தான் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்