- Advertisement -
Homeபொழுதுபோக்குஏகே 64 படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்… ஏதே, அந்த நடிகை இந்த படத்துல...

ஏகே 64 படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்… ஏதே, அந்த நடிகை இந்த படத்துல நடிக்கிறாங்களா? – அப்போ தரமான சம்பவமா இருக்குமே…

- Advertisement -

கடந்த 2023ம் ஆண்டில் ஜனவரி மாதம் துணிவு படம் வெளியானது. அதன்பிறகு அஜீத்குமார் நடித்த படங்கள் 2 ஆண்டுகளாக வெளியாகவில்லை. நடப்பு ஆண்டில் விடாமுயற்சி குட் பேட் அக்லி என்ற 2 படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதில் விடாமுயற்சி போதிய வரவேற்பை பெறாத நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி படம் பெரிய வெற்றியை பெற்றது.

ஆனால் அடுத்து படத்தில் நடிக்க கமிட் ஆகாமல் நடிகர் அஜீத்குமார் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே ஜனவரி மாதம் துவங்கிய கார் ரேஸில் கலந்துக்கொள்ள சென்றுவிட்டார். ஜனவரி முதல் அக்டோபர் வரை 10 மாதங்களுக்கு தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடக்கும் இந்த கார் ரேஸில் அவர் ஆர்வமாக கலந்துக்கொண்டு வருகிறார்.

- Advertisement -

இப்போது 7 மாதங்கள் கடந்த நிலையில் அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணியின் தலைவராகவும், போட்டியில் ஓட்டுனராகவும் உள்ள அஜீத்குமார் தனது அடுத்த படம் ஏகே 64 படத்தில் வரும் நவம்பரில் நடிக்க உள்ளார். அப்போதுதான் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த படத்தையும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் டைரக்ட் செய்ய உள்ளார்.

இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க உள்ளார். வருகிற நவம்பரில் துவங்கி வருகிற பிப்ரவரி மாதம் என 4 மாதங்களுக்குள் இந்த படத்தை முடித்துவிட்டு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் கார் ரேஸில் கலந்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார். அந்த கார் ரேஸ் முடிந்த பின்பு மீண்டும் அவரது 65வது படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஏகே 64 படம் குறித்த முக்கிய லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளிவர உள்ளது. ஏகே 64 படத்தில் அஜீத்குமாருக்கு ஜோடியாக கதாநாயகியாக தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா நடிக்கிறார். இவர் புஷ்பா 2 படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆடியவர். மேலும் பராசக்தி படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் ஏகே 64 படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் லப்பர் பந்து மாமன் படங்களில் நடித்த நடிகை ஸ்வாசிகா நடிப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஒரு குணச்சித்திர நடிகையாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைப்பதும் உறுதியாகி உள்ளது. விரைவில் இந்த அறிவிப்புகள் வெளியாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்