- Advertisement -
Homeபொழுதுபோக்குடிரெய்லர் உருவாக்கத்தில் அந்த விஷயத்தை கொண்டு வந்த குட் பேட் அக்லி படக்குழு, 3வது சிங்கிள்...

டிரெய்லர் உருவாக்கத்தில் அந்த விஷயத்தை கொண்டு வந்த குட் பேட் அக்லி படக்குழு, 3வது சிங்கிள் ரிலீஸ் எப்போ தெரியுமா? – ஏகே ரசிகர்களுக்கு இனி விருந்துதான்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவாகி உள்ள குட் பேட் அக்லி படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் படக்குழு சரியான இடைவெளியில் தந்து ஏகே ரசிகர்களை பெரிய அளவில் வைப் ஏற்றி வருகின்றனர். வருகிற 4ம் தேதி இரவு 8.02 மணிக்கு முன்பதிவு துவக்கம் என்ற அறிவிப்பால் ரசிகர்கள் ஏகப்பட்ட உற்சாகத்தில் உள்ளனர்.

ஏற்கனவே குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த டீசர் வௌியான 24 மணி நேரத்தில் அதாவது ஒரே நாளில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. அடுத்து ஓஜி சம்பவம் என்ற பர்ஸ்ட் சிங்கிள், காட் பிளஸ் யூ மாமே என்ற செகன்ட் சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில் வருகிற 3ம் தேதி அதாவது நாளை குட் பேட் அக்லி படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஏறக்குறைய அந்த நாளில் டிரெய்லர் வெளியீடு உறுதிதான் என்றும் ஏதேனும் திடீர் பிரச்னைகள் ஏற்படும் பட்சத்தில் வருகிற 4ம் தேதி நாளை மறுதினம் உறுதியாக டிரெய்லர் ரிலீஸ் ஆகிவிடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே இதுவரை வெளியான டீசர் 2 பாடல்களிலும் ஏகே ரசிகர்கள் இளம் வயதினர் ரசிக்கும்படியாகவே குட்பேட் அக்லி படம் இருப்பதாக ஒரு தோற்றம் ஏற்பட்ட நிலையில், பேமிலி ஆடியன்ஸ் பொதுவான ஆடியன்ஸ் ரசிக்கும் விதமாக இந்த படம் இருக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

அதற்கு பதில் தரும் விதமாக டிரெய்லரை பேமிலி ஆடியன்ஸ், பொதுவான ஆடியன்ஸ் விரும்பும் அம்சங்களுடன் படக்குழு உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் டிரெய்லரை பார்க்கும் போது இது யூத் ரசிகர்கள் ஏகே ரசிகர்கள் மட்டுமின்றி சகல தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒரு நல்ல பொழுதுபோக்கு படம் என்ற உறுதியை தரும் விதமாக இருக்கும் என்கின்றனர்.

மேலும் இப்போது லேட்டஸ்ட் தகவலாக, குட் பேட் அக்லி படத்தின் 3வது சிங்கிள் வருகிற 7ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. டீசர் டிரெய்லர் 3 பாடல்கள் என படம் ரிலீஸாவதற்கு முன்பே ரசிகர்களை தன்வசப்படுத்தும் பிரமோ வேலைகளை படக்குழு கச்சிதமாக திட்டமிட்டு செய்து வருகிறது. பர்ஸ்ட் சிங்கிள் செகன்ட் சிங்கிள் போலவே 3வது சிங்கிளும் பட்டைய கிளப்ப போகிறது என ஏகே ரசிகர்கள் குதூகலமாக உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்