- Advertisement -
Homeபொழுதுபோக்குகும்கி 2 படத்தில் நடிக்கும் ஹீரோ… வில்லன் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்… அடேங்கப்பா, படத்தோட...

கும்கி 2 படத்தில் நடிக்கும் ஹீரோ… வில்லன் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்… அடேங்கப்பா, படத்தோட பட்ஜெட் இத்தனை கோடியா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர் இயக்குனர் பிரபுசாலமன். கதையை மட்டுமே நம்பி படம் எடுக்கும் சில இயக்குனர்களில் பிரபு சாலமனும் ஒருவர். மைனா தொடரி கயல் காடன் லாடம் லீ கொக்கி கிங் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இவரது படங்கள் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருந்திருக்கின்றன.

அந்த வகையில் நடிகர் பிரபு மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமான படம் கும்கி. இந்த படத்தில் நாயகியாக கேரள நடிகை லட்சுமி மேனன் அறிமுகமாகி இருந்தார். கடந்த 2012ம் ஆண்டில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

- Advertisement -

யானையை மையப்படுத்திய கதைக்களத்தில், மலைகிராமத்துக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தும் கொம்பன் என்ற அசுரத்தனமான யானையை கட்டுப்படுத்த கும்கி யானையை அந்த கிராம மக்கள் வரவழைக்கின்றனர். ஆனால் கோவில் யானையை கும்கி யானை என அழைத்துச் செல்கிறார் படத்தின் நாயகன் விக்ரம் பிரபு.

அங்கு மலைவாழ் பெண் லட்சுமிமேனன் மீது விக்ரம் பிரபுவுக்கு காதல் ஏற்படுகிறது. ஊர்க்கட்டுப்பாடுகளை மீறி விக்ரம் பிரபு லட்சுமி மேனனுடன் சேர்ந்தாரா, கொம்பன் யானை என்ன செய்தது என்பது போன்ற சுவாரசியமான கதைக்களத்தில் இந்த படம் ரசிகர்களை கவர்ந்தது. தம்பி ராமையா காமெடி, டி இமான் இசையில் பாடல்கள் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.

- Advertisement -

இப்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் பிரபு சாலமன் கும்கி 2 படத்தை உருவாக்க தயாராகி விட்டார். இந்த படத்தில் மதி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். விக்ரம் பிரபு கும்கி 2 படத்தில் நடிக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். அதே போல் கும்கி 2 படத்தில் வில்லன் கேரக்டரில் அர்ஜூன் தாஸ் நடிக்கிறார். ஆனால் நான்கைந்து காட்சிகளில் மட்டுமே அவர் வருவார் என்றும் கூறப்படுகிறது.

நேற்று படக்குழு தரப்பில் இருந்து கும்கி 2 படத்தின் பிரமோ வீடியோ வெளியானது. இதை நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்து படக்குழுவுக்கு வாழ்த்துகளை கூறியிருந்தார். இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 12 கோடி என்றும் தகவல் வெளியாகி உள்ளது. புதுமுக நாயகன் நடிக்கும் படத்துக்கு ரூ. 12 கோடி பட்ஜெட் என்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்