தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜூன். ஐகான் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் இப்போது பான் இந்தியா நடிகராக கொண்டாடப்படுகிறார். குறிப்பாக அவர் நடித்த புஷ்பா புஷ்பா 2 படங்கள் அவரை இந்திய சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திர நடிகராக மாற்றிவிட்டது. அவர் நடித்த படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 2022ம் ஆண்டில் முதலில் வெளியான புஷ்பா படம் உலகளவில் ரூ. 450 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், 2024ம் ஆண்டில் டிசம்பர் மாதம் 5ம் தேதி வெளியான புஷ்பா 2 படம் உலகளவில் ரூ. 1800 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. இந்த 2 பாகங்களிலும் ராஷ்மிகா மந்தனா சுனில் ரமேஷ் ராவ் பகத் பாசில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
செம்மர கடத்தல் சம்பவங்களை மையப்படுத்திய இந்த படத்தில் ஹீரோயிசம் மட்டுமின்றி காதல் காமெடி சென்டிமென்ட் என சகல விதங்களிலும் அழுத்தமான நடிப்பை அல்லு அர்ஜூன் வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். இதையடுத்து புஷ்பா 3 படம் எப்போது என்ற ஆவலில் இந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இப்போது நடிகர் அல்லு அர்ஜூன் இயக்குனர் அட்லி இயக்கத்தில் தனது 22வது படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இயக்குனர் அட்லி தனது 6வது படமாக இந்த படத்தை இயக்குகிறார். சயன்டிபிக் கதையாக இந்த படம் உருவாகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 600 கோடியாகும்.
இதில் நடிகர் அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ. 250 கோடி என்றும் இயக்குனர் அட்லி சம்பளம் ரூ. 100 கோடி என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே அட்லி படத்தில் மட்டுமின்றி திரிவிக்ரம் இயக்கும் ஒரு படத்திலும் அல்லு அர்ஜூன் நடிக்க உள்ளார். 2 படங்களுக்குமே ஒரே விதமான கெட்டப் என்பதால் போதிய இடைவெளியில் 2 படங்களிலும் மாறி மாறி படப்பிடிப்புகளில் அல்லு அர்ஜூன் கலந்துக்கொள்கிறார்.
இந்நிலையில் புஷ்பா 3 படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அட்லி திரி விக்ரம் இயக்கத்தில் நடிக்கும் அல்லு அர்ஜூன் இந்த 2 படங்களையும் முடித்துவிட்டு, வருகிற 2028ம் ஆண்டில் துவங்கும் புஷ்பா 3 படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். புஷ்பா 3 படம் வருகிற 2028ம் ஆண்டில் துவங்கி, 2030ம் ஆண்டில் முடிவடைய உள்ளது. இந்த படத்திலும் அல்லு அர்ஜூன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவே நடிப்பாரா என்பதுதான் ரசிகர்களின் சந்தேகமாக உள்ளது.





