- Advertisement -
Homeபொழுதுபோக்குவித் லவ் படத்துக்காக இப்படி ஒரு பிரமோசனா? படக்குழுவை மனதார பாராட்டும் ரசிகர்கள் - தரமான...

வித் லவ் படத்துக்காக இப்படி ஒரு பிரமோசனா? படக்குழுவை மனதார பாராட்டும் ரசிகர்கள் – தரமான சம்பவமா இருக்குதே…?

- Advertisement -

கடந்தாண்டில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தில் நாயகனாக சசிக்குமார் நாயகியாக சிம்ரன் நடித்திருந்தனர். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தப்பி வரும் ஒரு அகதிகள் குடும்பம் பற்றிய கதைக்களத்தில் இந்த படம் ரசிகர்களின் மத்தியில் பலத்த பாராட்டை பெற்றது.

இந்த படத்தை இயக்கிய இளம் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த். முதல் படத்திலேயே நல்ல கவனத்தை பெற்றார். இந்த படத்தில் சில காட்சிகளிலும் அவர் நடித்திருந்தார். ஆனால் இப்போது அவர் தொடர்ந்து அடுத்த படத்தை இயக்காமல் வித் லவ் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். விரைவில் அந்த படம் திரைக்கு வர உள்ளது.

- Advertisement -

வித் லவ் படம் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் படக்குழு ஆர்வமாக செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு புது முயற்சியாக வித்யாசமான கோணத்தில் இந்த படத்துக்கு பிரமோசன் செய்யப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் பலரும் இது தரமான சம்பவமாக இருக்குதே என்று படக்குழுவினரை மனதார பாராட்டி வருகின்றனர்.

அதாவது இன்ஸ்டாகிராம் மூலம் சிலர் ஏழை எளிய மக்களுக்கு ரோட்டோரத்தில் வாழும் ஆதரவற்ற முதியவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு தானாக முன்வந்து அவர்களுக்கு உதவிகளை செய்கின்றனர். உணவு வாங்கி தருகின்றனர். ஆடைகள் வாங்கி தருகின்றனர். இது குறித்த வீடியோக்கள் நிறைய வெளியாகின்றன.

- Advertisement -

இப்படி வாங்கித் தரும் சிலரை தொடர்பு கொண்ட படக்குழுவினர் ஒரு பெரும் தொகையை அவர்களிடம் கொடுத்து இதுபோல் ரோட்டோரத்தில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள். அப்போது வித் லவ்வுடன் இதை செய்கிறோம் என்று சொல்லி வீடியோ வெளியிடுங்கள். அதுவே எங்கள் படத்துக்கு பிரமோசனாக இருக்கும் என்று கூறியிருக்கின்றனர்.

வித் லவ் படத்துக்கு இப்படி ஒரு வித்யாசமான முறையில் பிரமோசன் செய்வது மட்டுமின்றி அதற்காக ஒதுக்கப்படும் பணத்தை ஏழை எளிய மக்களுக்கு ஆதரவற்ற மக்களுக்கு உதவும் வகையில் படக்குழு செய்திருப்பது பெரிய வரவேற்பை கவனத்தை பெற்றிருக்கிறது. மேடை அலங்காரம் விமான பயணம் வீண் செலவு என்று கோடிக்கணக்கில் பணத்தை விரயமாக்காமல் பிரமோசன் செலவை கூட மற்றவர்களுக்கு உதவும் வகையில் யோசித்த படக்குழுவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்