- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் முன்ணனி நடிகர்கள் நடிகைகள் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல் - அடேங்கப்பா…....

தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகர்கள் நடிகைகள் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல் – அடேங்கப்பா…. தலையே கிர்ர்ர்ன்னு சுத்துதே…

- Advertisement -

தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை காலகட்டத்தில் முன்னணி நடிகர்களின் சம்பளமே சில நூறு ரூபாய்களாக தான் ஆரம்பத்தில் இருந்திருக்கிறது. அதன்பிறகு சில ஆயிரங்களாக அவை உயர்ந்திருக்கின்றன. எம்ஜிஆர் சிவாஜிகணேசன் கூட கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியது இல்லை.

கடைசியாக சிவாஜி கணேசன் நடித்த படையப்பா என்ற படத்தில்தான் அவரது சம்பளம் ரூ. 1 கோடியாக தரப்பட்டுள்ளது. அதுவும் ரஜினி அந்த படத்தின் தயாரிப்பாளராக இருந்ததால் அவரே அந்த சம்பளத்தை தீர்மானித்திருக்கிறார். தேவர் மகன் படத்தில் நடித்த சிவாஜி கணேசனுக்கு நடிகர் கமல்ஹாசன் ரூ. 20 லட்சம்தான் சம்பளமாக கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

ஆரம்பத்தில் நடித்த புதிதில் நடிகர் ரஜினிகாந்த் 16 வயதினிலே படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் ரூ. 2 ஆயிரம். மூன்று முடிச்சு படத்தில் நடிக்க அவர் வாங்கிய சம்பளம் ரூ. 5 ஆயிரம். இதை அவருடன் அந்த படங்களில் நடித்த நடிகை ஸ்ரீதேவியே பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நேர்காணலில் பேசிய போது வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.

ஆனால் இப்போதெல்லாம் 100 கோடி 150 கோடி 200 கோடி ரூபாய் என்றுதான் நடிகர்கள் சம்பளம் வாங்குகின்றனர். நடிகைகளின் சம்பளமும் தாறுமாறாக இருந்து வருகிறது. சமீபத்தில் முன்னணி நடிகர்கள் நடிகைகளின் சொத்து குறித்து தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 14 பேர் சொத்து குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

அதன்படி தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள் சொத்து விவரம் பின்வருமாறு, ரஜினிகாந்த் ரூ. 2680 கோடி, விஜய் ரூ. 1842 கோடி அஜீத்குமார் ரூ. 1250 கோடி கமல்ஹாசன் ரூ. 950 கோடி விஜய் சேதுபதி ரூ. 750 கோடி தனுஷ் ரூ. 700 கோடி சியான் விக்ரம் ரூ. 550 கோடி என்று சொல்லப்படுகிறது.

அதேபோல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் சொத்து விவரம் பின்வருமாறு, கீர்த்தி சுரேஷ் ரூ. 350 கோடி நயன்தாரா ரூ. 1000 கோடி திரிஷா ரூ. 850 கோடி ரோஜா ரூ. 1000 கோடி குஷ்பூ ரூ. 950 கோடி ஜோதிகா ரூ. 800 கோடி மறைந்த நடிகை ஸ்ரீதேவி ரூ. 2500 கோடி என்று சொல்லப்படுகிறது. இதை பார்க்கும் போது இது உருட்டா, உண்மையான்னு உறுதியாக தெரியலையே என்றுதான் ரசிகர்களுக்கு புலம்பத் தோன்றுகிறது. அதே நேரத்தில் இவ்வளவு கோடிகள் சொத்தா என்றும் புலம்ப வைக்கிறது.

- Advertisement -

சற்று முன்