- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்த திரைப்பட இயக்குனர்!உங்கள் பெருந்தன்மையை காட்ட இப்படி தான் அடையாளப்படுத்துவீங்களா? நீங்க அப்போ...

ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்த திரைப்பட இயக்குனர்!உங்கள் பெருந்தன்மையை காட்ட இப்படி தான் அடையாளப்படுத்துவீங்களா? நீங்க அப்போ எங்கே இருந்தீங்க?…

- Advertisement -

சென்னையை சேர்ந்தவர் பத்மா. இவர் ஒரு தூய்மை பணியாளர். சென்னை தியாகராய நகரில் கடந்த 11ம் தேதி தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ரோட்டோரத்தில் கிடந்த குப்பையில் ஒரு கவர் இருந்தது. அதை பத்மா எடுத்து பார்த்த போது நிறைய நகைகள் இருந்துள்ளன.

உடனடியாக அவர் அந்த நகைகளை கொண்டு போய் பாரீஸ் கார்னர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். அவரது இந்த நேர்மையான செயல் இணையத்தில் வைரலானது. இதுபற்றி தகவலறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் பத்மாவை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பத்மாவிடம் வழங்கினார்.

- Advertisement -

இப்போதெல்லாம் நேர்மை மலிவாகி விட்டது. சொந்த குடும்பத்தில் கூட ஒருவருக்கு ஒருவர் சுயநலம் பெருகி விட்ட ஒரு சூழலில் தூய்மை பணி செய்யும் ஏழ்மையான நிலையில் உள்ள பத்மா, இப்படி 45 சவரன் நகைகளை கண்டெடுத்து விட்டு அதை போலீசிடம் ஒப்படைத்தது பெரிய அளவில் அவருக்கு பாராட்டுகளை பெற்றுத் தந்துள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் குப்பையில் கண்டெடுத்த 45 சவரன் நகைகளை போலீசில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு நேரில் வரவழைத்து பாராட்டினார். பத்மாவின் நேர்மையை ஊக்குவிக்கும் விதமாக அவருக்கு தங்க சங்கிலி பரிசளித்தார். அவரது குடும்பத்துடன் கலந்துரையாடினார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

- Advertisement -

இதுகுறித்து மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் இயக்குனர் லெனின் பாரதி தனது எக்ஸ் பதிவில் கோபமாக விமர்சனம் செய்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக ரிப்பன் பில்டிங் வாசலில் போராடிக் கொண்டிருந்த போதெல்லாம் எங்கு இருந்தீர்கள் ரஜினிகாந்த் அவர்களே? உங்கள் பெருந்தன்மை வெங்காயத்தை காட்ட அவர்களை சீருடையோடு தான் அடையாளப்படுத்துவீர்களா என்று இயக்குனர் லெனின் பாரதி அந்த பதிவில் கோபமாக பதிவிட்டு இருக்கிறார்.

இந்த பதிவு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் ரஜினிகாந்த் பத்மாவை நேரில் அழைத்து வரச் சொன்ன போது தூய்மை பணியாளர் உடையில் வர வேண்டும் என்று அவர் சொல்லி இருக்க மாட்டார். அது ஏதேச்சையாக நடந்த ஒரு நிகழ்வாக கூட இருக்கலாம். இதற்கு ரஜினியை குறை சொல்வது சரியல்ல. அவரது நல்ல செயலை தவறாக விமரசிப்பது தவறு என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்