- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவர் ரஜினியா? தலைவர் தனுஷா? - பிறந்த நாளில் கிளம்பிய சர்ச்சை - தவெக கட்சியை...

தலைவர் ரஜினியா? தலைவர் தனுஷா? – பிறந்த நாளில் கிளம்பிய சர்ச்சை – தவெக கட்சியை காப்பி அடிக்கிறதா தனுஷின் ரசிகர் மன்றம்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தலைவர் என்று அழைப்பது ரசிகர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. பெரும்பாலான ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்கள் நடிகைகள் கூட ரஜினியை குறிப்பிட்டு பேசும்போது தலைவர் என்று பெருமையாக சொல்வதுதான் வழக்கமாக உள்ளது.

ரஜினி நடிக்கும் படங்களுக்கு தலைவர் 171 தலைவர் 172 என்றுதான் தற்காலிகமாக டைட்டில் வைக்கப்படுவது வழக்கம். தமிழ் சினிமாவை பொறுத்தவரை தலைவர் என்றாலே அது கடந்த பல ஆண்டுகளாக ரஜினியை தான் குறிப்பிடும். 75 வயது கடந்தும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வரும் ரஜினிகாந்தை தலைவர் என்று அழைப்பதும் மரியாதையாக கௌரவமாக உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இன்று நடிகர் தனுஷ் தனது 43 வது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார். அப்பொழுது அவரது அடுத்த படம் ஓம் படத்தின் போஸ்டரின் தலைவர் தனுஷ் எனக் குறிப்பிட்டு அந்த போஸ்டர் வெளியாகி உள்ளது. இது நிச்சயமாக நடிகர் தனுஷூக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.

தலைவர் என்று சூப்பர் ஸ்டார் ரஜினியை குறிப்பிடும்போது நடிகர் தனுஷ் தன்னை தலைவர் எனக் குறிப்பிட்டு போஸ்டர் வெளியிட எப்படி அனுமதித்தார் என்பது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. தமிழ் சினிமாவுக்கு தலைவர் என்று அழைக்கிற தகுதி பெற்ற மூத்த நடிகராக ரஜினிகாந்த் இருக்கும்போது இப்படி தன்னை தலைவர் என்று அழைக்க தனுஷ் எப்படி சம்மதித்தார் என்பதும் பெரிய கேள்வியாக மாறி உள்ளது.

- Advertisement -

மேலும் நடிகர் தனுஷின் ரசிகர் மன்ற தலைவர் இயக்குனர் சுப்பிரமணிய சிவா அவர் அணிந்துள்ள வெள்ளை சட்டையில் வலது பகுதியில் கழுத்துக்கு அருகே சிவப்பு நிறத்தில் தனுஷ் படம் பொறித்த நிலையில் இன்று காணப்பட்டார். தவெக அமைச்சர் முதல்வர் விஜயின் முன்னாள் ரசிகர் மன்ற பொதுச் செலாளர் புஸ்லி ஆனந்த், தனது சட்டையின் மேற்பகுதியில் தளபதி விஜயின் புகைப்படத்தை இப்படிதான் பொறித்து உருவப்படமாக வைத்திருப்பார்.

அதை அப்படியே காப்பியடிப்பது போலவே தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சுப்ரமணிய சிவாவின் செயல்பாடு உள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷின் பேச்சும் நடவடிக்கைகளும் அவர் அரசியலுக்கு வரப்போவதை ஏறக்குறைய உறுதி செய்துவிட்டது. மேலும் இப்போது தலைவர் தனுஷ் என்று அழைக்கும் அளவுக்கு நிலைமை போய்க்கொண்டு இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்