- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ ஆடியோ லாஞ்சுக்கு வந்த சிக்கல், குழப்பத்தில் ஆழ்ந்துள்ள படக்குழு, ஆனாலும் ரசிகர்களுக்கு அதுல ஒரு...

லியோ ஆடியோ லாஞ்சுக்கு வந்த சிக்கல், குழப்பத்தில் ஆழ்ந்துள்ள படக்குழு, ஆனாலும் ரசிகர்களுக்கு அதுல ஒரு நல்ல செய்தி இருக்காம்? ஆஹான்

- Advertisement -

“லியோ” ஆடியோ வெளியீட்டு விழா எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். “லியோ” திரைப்படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆதலால் செப்டம்பர் இறுதியில் இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

முதலில் “லியோ” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மதுரையில் வைத்த நடத்த படக்குழு திட்டமிட்டதாக கூறப்பட்டது. ஆதலால் ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்தனர்.

- Advertisement -

ஆனால் அவர்களின் உற்சாகத்தை கெடுக்கும் விதமாக ஒரு செய்தி பின்னாளில் வெளிவந்தது. அதாவது “லியோ” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவில் வைத்து நடத்த படக்குழு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் கலக்கம் அடைந்தனர். வசதிப்படைத்த ரசிகர்கள் மட்டுமே மலேசியாவிற்கு சென்று பார்க்க முடியும், வசதி இல்லாத ரசிகர்கள் என்ன செய்வார்கள் என்று புலம்பினார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் “லியோ” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். அதாவது மலேசியாவில் படக்குழு ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக தேர்வு செய்திருந்த மிகப் பெரிய வளாகத்தில் அவர்கள் குறிப்பிட்டிருந்த அதே தேதியில் சீனாவை சேர்ந்த ஒரு பெரிய நிறுவனம் ஒரு விழாவை நடத்த புக் செய்துவிட்டார்களாம்.

“லியோ” படத்தின் தயாரிப்பாளர் அந்த சீனாவைச் சேர்ந்த நிறுவனத்தினரிடம் சென்று நிலைமையை கூறி விழாவை தள்ளி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்களாம். அதற்கு அந்த சீன நிறுவனம், வருகிற வெள்ளிக்கிழமைக்குள் பதில் சொல்கிறோம் என கூறியுள்ளார்களாம். ஆனால் ஒரு பக்கம், “ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும், சென்னையிலேயே நடத்திவிடலாம்” என்று படக்குழுவினர் சிந்தித்து வருகிறார்களாம். ஆதலால் ரசிகர்களின் விருப்பப்படி “லியோ” ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்