லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் லியோ திரைப்படம் நேற்று வெளியானது. படத்துக்கு விஜய் ரசிகர்கள் நல்ல விமர்சனங்களை கொடுத்தாலும் காமன் ஆடியன்ஸ் அப்செட்டான விமர்சனத்தையே கொடுத்திருக்கின்றனர். அதேபோல் பத்திரிகையாளர்கள், சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் படத்துக்கு சொல்லிக்கொள்ளும்படியான டாக்ஸ் எதுவும் இல்லை.
இதனால் விஜய் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆனாலும் விஜய்யின் வளர்ச்சியை தடுப்பதற்காக வேண்டுமென்றே படத்தின் மீது நெகட்டிவ் விமர்சனங்களை சிலர் முன்வைக்கின்றனர் எனவும் விஜய் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். விஜய் ரசிகர்களின் பார்வையில், தங்கள் தளபதி இப்படி நடிப்பதை பார்த்து பல காலம் ஆகிவிட்டது. இரண்டு குழந்தைகளுக்கு ஒரு நடுத்தர வயது அப்பாவாக தனது நடிப்பில் பக்குவத்தை காட்டியிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜின் மேக்கிங் எல்லாம் அவ்வளவு அட்டகாசமாக இருந்தன. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அன்பறிவ் மாஸ்டர்ஸ் பட்டையை கிளப்பியிருக்கின்றனர் என்று சிலாகிக்கின்றனர். இருந்தாலும் படத்தில் கதை ரீதியாக ஒன்றுமே இல்லை. லோகேஷ் கனகராஜின் இயக்கம் என்று நம்பவே முடியவில்லை. எல்சியூ கனெக்ட் ஒர்க் அவுட்டே ஆகவில்லை என்ற பேச்சும் பலமாக எழுந்திருக்கிறது.
இப்படி பாசிட்டிவ், நெகட்டிவ் விமர்சனங்களை லியோ படம் கலந்து பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல நிலையை அடைந்துவிட்டதாகவே பலரும் தெரிவித்தனர். இன்று காலை நிலவரப்படி லியோ படத்தின் முதல் நாள் வசூல் உலக அளவில் 140 கோடி ரூபாய் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Hello records..
He broke you down 🔥You couldn’t last a day 😎#Leo first day worldwide gross collection is 148.5 crores+ 💥
HIGHEST DAY 1 WORLDWIDE GROSS COLLECTION OF THE YEAR FOR AN INDIAN FILM 🤜🤛#BlockbusterLeo #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers… pic.twitter.com/ssC1Vk5RIx
— Seven Screen Studio (@7screenstudio) October 20, 2023
இந்நிலையில் லியோ படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு என்பது குறித்து படத்தை தயாரித்த செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதன்படி லியோ படமானது முதல் நாளில் 148 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூல் செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கின்றனர்.





