- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக அரசுக்கு எதிராக களம் இறங்கிய லியோ டீம் - இப்போதே ஆளுங்கட்சியை எதிர்க்க துவங்கி...

தமிழக அரசுக்கு எதிராக களம் இறங்கிய லியோ டீம் – இப்போதே ஆளுங்கட்சியை எதிர்க்க துவங்கி விட்டாரா விஜய்?

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம், வரும் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், லியோ படத்தை காண விஜய் ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். முதலில் ரசிகர் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு, இப்போது தினமும் ரசிகர் காட்சி உட்பட 5 காட்சிகள் நடத்திக்கொள்ள அனுமதித்துள்ளது.

அதாவது தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி, காலை 9 மணிக்கு லியோ காட்சிகள் துவங்கப்பட்டு, இரவு 1.30 மணிக்குள் முடித்துவிட வேண்டும். ஒருநாளில், குறிப்பிட்ட நேரத்துக்குள், ரசிகர் காட்சி உட்பட 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும். 19 முதல், 24ம் தேதி வரை, 6 நாட்களுக்கு இந்த சிறப்பு அனுமதி தரப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆனால், ஏற்கனவே காலை 4 மணி, 7 மணி, 8 மணி என ரசிகர் சிறப்பு காட்சி நடத்த திட்டமிட்ட தியேட்டர் நிர்வாகங்கள், தமிழக அரசின் இந்த கிடுக்கிப்பிடி உத்தரவால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி லியோ படத்துக்காக க்யூப் மூலம் 15 விளம்பரங்கள் வரை, லியோ திரையிடலின் போது காட்டப்பட வேண்டும், படம் இரண்டே முக்கால் மணி நேரம் என்றால், விளம்பரங்களுக்காக 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஒவ்வொரு காட்சிக்கும் ஒதுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி காட்சி துவங்கும் முன், காட்சியை முடித்த பின் திரையரங்கை சுத்தப்படுத்தவும் நேரம் ஒதுக்கப்பட வேண்டும். இடைவேளைக்கு 10 முதல், 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற நிலையில், அரசு அனுமதித்துள்ள இந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் 5 காட்சிகளை திரையிடுவதில், தியேட்டர் நிர்வாகங்களுக்கு பலத்த சிக்கல்கள் உள்ளன.

- Advertisement -

இதையடுத்து, அரசு அனுமதித்துள்ள இந்த நேர அளவுக்குள் தினமும் 5 காட்சிகளை, ஆறு நாட்களுக்கு எங்களால் திரையிட முடியாது. அதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், தியேட்டர் நிர்வாகங்களே, தங்களது வசதிப்படியான நேரங்களில் இந்த காட்சிகளை திரையிட்டுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என, அரசு உத்தரவுக்கு எதிராக கோர்ட்டுக்கு சென்றுள்ளது, பலத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லியோ படத்தை பொறுத்த வரை, இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட விஷயத்தில், அரசியல் அழுத்தமே காரணமே என்ற குற்றச்சாட்டு, திமுக அரசு மீது எழுந்தது. பிறகு, ரசிகர் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதும், தமிழக அரசின் காழ்ப்புணர்ச்சியை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. இப்போது தினமும் 5 காட்சிகளை, கால வரையறைக்குள் கொண்டு வந்ததும், இன்னும் ஆளுங்கட்சியின் கோபத்தையே காட்டியது. இதைத்தொடர்ந்து, இப்போது லியோ தயாரிப்பாளர் கோர்ட் வரை இந்த பிரச்னையை கொண்டு சென்றது, ஆளுங்கட்சிக்கு எதிரான விஜய் அரசியல் துவக்கமாக பார்க்கப்படுகிறது. இது, சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்