- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச், ஒரு வழியாக தேதியை லாக் செய்த படக்குழு, ஆனால் அதில்...

லியோ திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச், ஒரு வழியாக தேதியை லாக் செய்த படக்குழு, ஆனால் அதில் ஒரு சோகம் என்னனா?

- Advertisement -

“லியோ” திரைப்படத்தின் வெளியீட்டிற்காகத்தான் ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதற்கு முன்பு “லியோ” படத்தின் ஆடியோ வெளியீட்டிற்கு மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் “லியோ” ஆடியோ வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு விஜய் ஒரு குட்டிக் கதையை சொல்லி முற்றுப்புள்ளி வைப்பார் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அந்த வகையில் “லியோ” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை முதலில் மலேசியாவில் வைக்கலாமா என்று படக்குழுவினர் யோசித்து வந்தனராம். ஆனால் சில காரணங்களால் மலேசியாவில் அவர்கள் எதிர்பார்த்த பிரம்மாண்ட அரங்கு Available ஆக இல்லையாம்.

ஆதலால் துபாயில் நடத்திவிடலாமா என்றெல்லாம் படக்குழுவினர் சிந்தித்தனராம். “லியோ” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா உறுதியாக துபாயில்தான் நடைபெற உள்ளதாக பல தகவல்களும் வெளிவந்தன. இதனால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் மூழ்கினர்.

வெளிநாட்டில் ஆடியோ வெளியீட்டு விழாவை வைத்தால் எளிய ரசிகர்கள் எப்படி சென்று பார்ப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

அதாவது “லியோ” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதில் ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமான செய்தியும் ஒன்று இருக்கிறது.

அதாவது எப்போதும் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் ஒரு குட்டிக்கதை ஒன்றை கூறுவார் அல்லவா. அதே போல் “லியோ” ஆடியோ வெளியீட்டு விழாவில் ஒரு குட்டிக் கதையை விஜய் கூறவுள்ளாராம். ஆனால் அந்த குட்டிக் கதையில் சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்த எந்த விஷயமும் இடம்பெறாது என கூறுகின்றனராம்.

சற்று முன்