- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்துக்கு பிறகு அப்படி ஒரு சாதனையை படைத்த தனுஷ்... நடிகரை குபேரனாக்கிய குபேரா திரைப்படம்...

ரஜினிகாந்துக்கு பிறகு அப்படி ஒரு சாதனையை படைத்த தனுஷ்… நடிகரை குபேரனாக்கிய குபேரா திரைப்படம்…

- Advertisement -

நடிகர் தனுஷிற்கு கடந்த வாரம் குபேரா திரைப்படம் வெளியானது. தமிழ் மொழியை தாண்டி பிற மொழிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் தனுஷ், ஹாலிவுட் வரை நடித்து விட்டார். இப்படியான சூழலில் தெலுங்கு சினிமாவில் அவர் நேரடியாக சார் திரைப்படத்தில் நடித்தார். வெங்கி அட்லூரி இயக்கிய இந்த திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து இரண்டாவதாக நேரடி தெலுங்கு திரைப்படமாக குபேராவில் நடித்தார். சேகர் கமுலா இதனை இயக்கி இருந்தார். நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இதன் முதல் போஸ்டர் வெளியாகும் போது அதில் பிச்சைக்காரன் கெட்டப்பில் தனுஷ் இருந்தது பலரும் கவனிக்கும் வகையில் அமைந்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியது. இப்படியான சூழலில் கடந்த இருபதாம் தேதி உலகம் முழுவதும் குபேரா ரிலீஸ் செய்யப்பட்டது. பெரும் பணக்காரர்களிடமிருந்து, பினாமி தொகையானது பிச்சைக்காரரான தனுஷிடம் சென்று சேர, அதன் பிறகு கதையில் என்னென்ன நடக்கிறது என்பதைத் தான் இயக்குனர் காட்சியாக பதிவு செய்திருந்தார்.

தமிழில் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கும் சூழலில், தெலுங்கு சினிமாவில் சக்கை போடு போட்டு வருகிறது. குறிப்பாக பலரும் தனுசை பாராட்டி இருக்கிறார்கள். பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் மிகவும் எதார்த்தமான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருப்பதாகவும், அடுத்த தேசிய விருது அவருக்கு தயாராக இருக்கிறது என்றும் கூறி வந்தனர்.

- Advertisement -

ஹைதராபாத்தில் நடைபெற்ற இதன் வெற்றி விழாவில் தனுஷும் பங்கேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிரஞ்சீவி, இந்த திரைப்படத்தில் தேவா கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷை விட மிகச் சிறந்த நடிகர் இருக்க முடியாது என்று குறிப்பிட்டார். தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு சினிமாவில் குபேரா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியும் பெற்றிருக்கிறது.

குறிப்பாக படம் ரிலீசான மூன்று நாட்களிலேயே கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக சொன்னார்கள். அதுமட்டுமல்ல, தெலுங்கு சினிமாவில் ரஜினிகாந்த்திற்கு பிறகு தமிழ் நடிகர் ஒருவர் படம் வெளியான மூன்று நாட்களிலேயே இரட்டை இலக்கங்களில் கோடிக்கணக்கில் வசூல் செய்திருப்பது இதுவே முதல்முறை என்றும் சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர். தற்போது குபேரா திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டிவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்