- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம டிரீட், லோகேஷ் கனகராஜே வெளியிட்ட அதிகாரப்பூர்வ அப்டேட், என்னன்னு தெரிஞ்சிக்கனுமா?

விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம டிரீட், லோகேஷ் கனகராஜே வெளியிட்ட அதிகாரப்பூர்வ அப்டேட், என்னன்னு தெரிஞ்சிக்கனுமா?

- Advertisement -

வருகிற 22 ஆம் தேதி விஜய்யின் 49 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. எப்போதும் விஜய் பிறந்தநாளுக்கு அவர் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் டீசர் அல்லது டிரைலர் அல்லது டைட்டில் போஸ்டர் போன்ற எதாவது ஒன்று வெளிவருவது வழக்கம். அந்த வகையில் வருகிற விஜய் பிறந்தநாளுக்கு “லியோ” திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. மேலும் அடுத்து விஜய் வெங்கட் பிரபுவுடன் இணையவுள்ள திரைப்படத்தை குறித்தான அதிகாரப்பூர்வ அப்டேட் எதாவது வெளிவர வாய்ப்புள்ளதா என்று ரசிகர்கள் ஏங்கினார்கள். ஆனால் “லியோ” திரைப்படம் வெளியாகும் வரை “தளபதி 68” குறித்த எந்த அப்டேட்டையும் வெளியிடக்கூடாது என்று விஜய் கண்டிஷன் போட்டுவிட்டதாக ஒரு தகவல் வெளிவந்தது. ஆதலால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் மூழ்கினர்.

- Advertisement -

அதன் பின் வருகிற விஜய் பிறந்தநாளில் “லியோ” திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளிவரவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் “லியோ” திரைப்படம் குறித்த ஒரு முக்கியமான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

அதாவது வருகிற விஜய் பிறந்தநாள் அன்று “லியோ” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளிவரவுள்ளது. இந்த அறிவிப்பைதான் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். “அல்டர் ஈகோ நான் ரெடி” என்று இப்பாடலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு போஸ்டரில் விஜய் தனது வாயில் சிக்ரெட்டுடனும் கையில் ஒரு துப்பாக்கியுடனும் மிக மாஸ் ஆக தென்படுகிறார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -

“லியோ” திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலி கான், அர்ஜூன் உள்ளிட்ட பலரும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்