- Advertisement -
Homeபொழுதுபோக்குநாளை ரிலீஸாகும் ரஜினி படத்துக்கு ஒரு நாள் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி, ஜெயிலர்...

நாளை ரிலீஸாகும் ரஜினி படத்துக்கு ஒரு நாள் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி, ஜெயிலர் படம் வசூலை முறியடிப்பாரா வேட்டையன்? – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

- Advertisement -

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் நாளை ரிலீஸ் ஆகிறது. ஜெய்பீம் பட இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாப் பச்சன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.

மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரோகிணி, ராணா டகுபதி, பகத் பாசில், கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. ரஜினி இதில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். எஜூகேஷனல் மாபியா குறித்தும் இந்த படம் பேசுகிறது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் முதலில் 50 கோடி ரூபாய் வசூலித்த படம் ரஜினி நடித்த சந்திரமுகி படம்தான்.முதலில் 100 கோடி வசூலித்த படம் ரஜினி நடித்த சிவாஜி படம்தான். அதே போல் முதன்முதலாக 800 கோடி ரூபாய் வசூலித்த படம் ரஜினி நடித்த 2.0 படம்தான். இப்படி வசூலில் அடுத்தடுத்த இலக்குகளை எட்டிய இந்த 3 படங்களுமே நடிகர் ரஜினிகாந்தின் நடித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் வெளியான படங்களில் அதிக அளவில் வசூலை பெற்ற படமாக ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் இருந்தது. அந்த படத்தின் மொத்த வசூல் 600 கோடி ரூபாய் என்பது பாக்ஸ் ஆபீஸ் வெளியிட்ட அதிகாரபூர்வமான தகவல். இந்த வசூலை அடுத்து வந்த சில முன்னணி நடிகர்களின் படங்கள் எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த படமும் 600 கோடி ரூபாய் வசூலை எட்டவில்லை.

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த லியோ படம், இந்த ஆண்டு வெளியான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படமும், ஜெயலர் படத்தை விட குறைவாக வசூலித்ததாக கூறப்படுகிறது. தி கோட் படம் ரூ. 455 கோடி வசூலித்திருப்பதாக அந்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே இன்று அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ரஜினியின் வேட்டையன் படம் உள்ளது. நாளை காலை 9 மணிக்கு வேட்டையன் ரிலீஸ் ஆகிறது. இந்த படம் ரஜினியின் முந்தைய படமான ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. வேட்டையன் படம் ரிலீஸாகும் நாளை ஒருநாள் மட்டும், தியேட்டர்களில் ஒரு சிறப்பு காட்சியுடன் 5 காட்சிகள் நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை வேட்டையன் முதல் காட்சி, காலை 9 மணிக்கு துவங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்