- Advertisement -
Homeபொழுதுபோக்குசும்மா கொளுத்தி போடுவோம்ன்னுதான் அந்த மாதிரி பாட்டு எழுதுனேன்- ஓப்பனாக பேசிய லியோ பாடல் ஆசிரியர்

சும்மா கொளுத்தி போடுவோம்ன்னுதான் அந்த மாதிரி பாட்டு எழுதுனேன்- ஓப்பனாக பேசிய லியோ பாடல் ஆசிரியர்

- Advertisement -

“லியோ” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “நா ரெடிதான் வரவா” பாடல் தற்போது அதிகளவில் கேட்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பாடல் யூட்யூப் தளத்தில் 29 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வருகிறது. அனிருத் இசையில் இந்த பாடலை விஷ்ணு எடவன் என்பவர் எழுதியுள்ளார். இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இவர் “விக்ரம்” திரைப்படத்தில் “போர் கண்ட சிங்கம்”, “நாயகன் மீண்டும் வரார்” போன்ற பாடல்களை எழுதியுள்ளார். மேலும் “டாடா” திரைப்படத்திலும் சில பாடல்களை எழுதியுள்ளார்.

“நா ரெடிதான் வரவா’ பாடலின் வரிகள் அனைத்தையும் ரசிகர்கள் பலர் டீகோட் செய்து வருகின்றனர். பல வரிகள் விஜய்யின் அரசியல் நுழைவை குறிக்கும் வகையில் இருப்பதாக கூறி வருகின்றனர். இதில் குறிப்பாக “தேள் கொடுக்கு சிங்கத்தை சீண்டாதப்பா” என்ற வரியை டீகோட் செய்த ரசிகர்கள், “லியோ” திரைப்படத்தில் ரோலக்ஸ் சூர்யா நடித்துள்ளார் என்றும் இத்திரைப்படம் LCUக்குள் வரும் எனவும் கூறி வருகின்றனர்.

அதாவது “விக்ரம்” திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா, தனது கழுத்தில் தேள் உருவத்தை பச்சை குத்தியிருந்தார். ஆதலால் “லியோ” திரைப்படத்தில் நிச்சயம் சூர்யா நடிக்கவுள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் “நா ரெடிதான்” பாடலை எழுதிய விஷ்ணு எடவன் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் அந்த பாடலில் இடம்பெற்ற “தேள் கொடுக்கு சிங்கத்தை சீண்டாதப்பா” என்ற வரியை குறித்து கேட்ட நிருபர், “இந்த வரி LCU-ஐ குறிக்கிறதா?” என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த விஷ்ணு எடவன்,

“LCU –ஐ மனதில் வைத்து அந்த வரியை எழுதவில்லை. வேறு எதாவது மிருகத்தின் பெயரை வைத்து எழுதலாம் என்று பார்த்தால் வேறு எதுவும் சரியாக அமையவில்லை. ஆதலால் தேளின் பெயரை எழுதினேன். இதை வைத்து ரசிகர்கள் மீம் உருவாக்குகிறார்கள். அவர்களின் தியரி எல்லாம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.

தேள் என்று எழுதினால் நீங்கள் கேட்பது போன்ற கேள்விகள் வரும் என்றும் தெரியும். பரவாயில்லை நன்றாகத்தான் இருக்கிறது. சும்மா கொளுத்திப்போடுவோம் தமாசாக இருக்கும் என்று நினைத்துத்தான் அவ்வாறு எழுதினேன்” என அவர் கூறியுள்ளார்.

 

சற்று முன்