- Advertisement -
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, இப்போது விஜய் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். காரில் வெளியே வந்தார். விமான நிலையம் வந்தார். விமானம் ஏறினார். விமான நிலையத்தில் வெளியே வந்தார். காரில் ஏறினார். பிரசாரத்துக்கு கிளம்பினார். பிரசார வேனில் ஏறினார். முருங்கை காய் பறித்தார். கடையில் டீ குடித்தார். டிராக்டர் ஓட்டினார் இதுவா நாட்டு மக்களுக்கு முக்கியம்? இது நாடா என்ன? எது எதுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது இல்லையா? நாங்கள் சொல்கிற மக்கள் பிரச்னைகளை ஊடகங்கள் வெளியே சொல்வதே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.





