- Advertisement -
Homeபொழுதுபோக்கு24 மணி நேரம்கூட ஆகல.. அதுக்குள்ள லியோ செய்த சாதனை.. யப்பா விஜய் மாஸ் காட்டிட்டாரே.....

24 மணி நேரம்கூட ஆகல.. அதுக்குள்ள லியோ செய்த சாதனை.. யப்பா விஜய் மாஸ் காட்டிட்டாரே.. 1000 கோடி கன்ஃபார்மோ

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்தப் படத்தின் மீதுதான் ஒட்டுமொத்த கோலிவுட்டின் எதிர்பார்ப்புமே இருக்கிறது. வரிசையாக அப்டேட்டுகள் வெளியான சூழலில் நேற்று மாலை லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

இதற்காக காலையிலிருந்தே ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்க ஆரம்பித்தனர். ட்ரெய்லர் வெளியானதும் அதனை திருவிழா போல் கொண்டாடிவருகின்றனர் ரசிகர்கள்.முக்கியமாக படம் பக்கா ஆக்‌ஷன் பேக்கேஜாக வந்திருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. இதன் காரணமாக முதல் நாள் முதல் ஷோ தியேட்டர் தெறிக்கப்போவது என்பது மட்டும் உண்மை.

- Advertisement -

குறிப்பாக லியோ ட்ரெய்லர் வெளியான எஃபெக்ட்டில் படத்தின் டிக்கெட்டை புக் மை ஷோவில் புக் செய்ய கிட்டத்தட்ட நான்கு லட்சத்து 15 ஆயிரம் பேர் ஆர்வத்துடன் இருந்தனர். இது கோலிவுட்டில் வேறு எந்த படத்துக்கும் நிகழாதது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கண்டிப்பாக லியோ படத்துக்கு ஒரு வாரம் திரையரங்கம் ஹவுஸ் ஃபுல்லாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வசூலிலும் சக்கைப்போடு போட்டு 1000 கோடி ரூபாயை கன்ஃபார்ம் செய்யும் என ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

இப்படி ஒருபக்கம் ட்ரெய்லருக்கு பக்கா பாசிட்டிவ் விமர்சனமும், படம் பற்றிய ஹைப்பும் ஏறிக்கொண்டிருக்கிறது. ஆனால் ட்ரெய்லரை பார்க்கும்போது படத்தில் உச்சக்கட்ட வன்முறையும், ரத்தமும் இருப்பது உறுதியாகியிருக்கிறது. வயலென்ஸை படத்தில் வைப்பது லோகேஷின் ஸ்டைல்தான் என்றாலும் லியோ படத்தில் அது கொஞ்சம் ஓவர் டோஸாக இருக்கும் என தெரிகிறது.

- Advertisement -

அதேபோல் விஜய்யிடன் கெட்டப்பையும் பலர் விமர்சித்துவருகின்றனர். இவற்றையெல்லாம் தாண்டி ட்ரெய்லரில் விஜய் பேசும் கெட்ட வார்த்தைக்கு கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. அரசியலுக்கு வரப்போவதாக கூறப்படும் விஜய் இப்படி பேசலாமா அவரே இளைய தலைமுறையினருக்கு தவறான வழிகாட்டியாக மாறியிருக்கிறார் என விமர்சன அம்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

இப்படி ட்ரெய்லருக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தாலும் ட்ரெய்லர் இன்னொரு சாதனையை சத்தமே இல்லாமல் செய்திருக்கிறது. அதாவது ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரம்கூட இன்னும் ஆகாத சூழலில் இதுவரை 29 மில்லியன் பார்வைகளை யூட்யூபில் கடந்திருக்கிறது. எனவே ட்ரெய்லர் இன்னும் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு சாதனையை படைத்திருப்பதால் விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட உற்சாகத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்