- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த விஷயத்துக்காக எஸ்ஜே சூர்யாவை பார்க்க யாராச்சும் போனா, அவருக்கு நோ மட்டும்தான் பதில் -...

இந்த விஷயத்துக்காக எஸ்ஜே சூர்யாவை பார்க்க யாராச்சும் போனா, அவருக்கு நோ மட்டும்தான் பதில் – அப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே?

- Advertisement -

நடிகர் எஸ்ஜே சூர்யா தமிழ் சினிமாவில் வாலி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அஜீத் இரட்டை வேடங்களில் நடித்த இந்த படத்தில் தம்பி மனைவி சிம்ரன் மீது ஆசைப்படும் ஆண்டி-ஹீரோ கேரக்டரில் அஜீத் வித்யாசமான நடிப்பை தந்திருந்தார். இதில் வாய் பேசாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியாகவும் அவர் நடித்திருந்தார்.

வாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து, எஸ்ஜே சூர்யா இயக்கிய படம் குஷி. விஜய், ஜோதிகா நடித்த இந்த படம், காதலர்களுக்குள் ஏற்படும் ஈகோவை மையப்படுத்தியது. இந்த படமும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. எஸ்ஜே சூர்யாவுக்கு மிகப்பெரிய அடையாளத்தை, அங்கீகாரத்தை இந்த படம் கொடுத்தது. விஜய், ஜோதிகாவுக்கும் இந்த படம், அவரது திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது.

- Advertisement -

அதுவரை இயக்குநராக இருந்த எஸ்ஜே சூர்யா, பிறகு நடிக்கவும் துவங்கினார். அன்பே ஆருயிரே, நியூ, கள்வனின் காதலி போன்ற படங்களில் நடித்தும் ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் சில சர்ச்சைகளில் சிக்கிய அவர், சென்சார்போர்டு பெண் அதிகாரி வானதி சீனிவாசன் ( இப்போது கோவை தொகுதி பாஜக எம்எல்ஏ) மீது செல்போனை தூக்கி வீசியதாக பஞ்சாயத்தில் சிக்கினார்.

அதன்பிறகு கைது, கோர்ட், வழக்கு என பல பிரச்னைகளில் சிக்கிய எஸ்ஜே சூர்யா ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார். ஏறக்குறைய 10 ஆண்டுகளாக அவரை காண முடியவில்லை. இந்த சூழலில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் வந்து நடிப்பை தொடர்ந்தார்.

- Advertisement -

வெங்கட்பிரபுவின் மாநாடு படம் எஸ்ஜே சூர்யாவுக்கு நல்ல ரீ என்ட்ரியாக அமைந்தது. அடுத்து மார்க் ஆண்டனி முக்கிய இடத்தை மீண்டும் கொடுத்தது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம், பழைய இடத்துக்கு எஸ்ஜே சூர்யா வந்துவிட்டதை உறுதிபடுத்தியது. இப்போது மிக பிஸியான தமிழ் நடிகர்களால் ஒருவராக அவர் இருக்கிறார்.

இந்நிலையில் ஒரு படத்தில் நடிக்க ரூ. 8 கோடி முதல் ரூ.10 கோடி வரை எஸ்ஜே சூர்யா சம்பளம் பெறுகிறார். இதுவரை 6 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 6 படங்களின் மொத்த சம்பளம் 50 கோடி முதல் 60 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இதில் தனியாகவும், சில படங்களில் 2 ஹீரோக்களில் ஒருவராகவும் அவர் நடிப்பதாக தெரிய வந்துள்ளது. அடுத்த ஆண்டு 2024 டிசம்பர் வரை அவரது கால்ஷீட் இல்லை. அதனால் யாராவது தயாரிப்பாளர்கள் அவரை நேரில் பார்த்து கால்ஷீட் கேட்கச் சென்றால், இப்போதைக்கு இல்லை என்பது மட்டுமே அவரது பதிலாக இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்